டெல்லிக்கு ஓடுகிறார் கிருஷ்ணா
பெங்களூர்:
காவிரி ஆணையக் கூட்டம் நடக்கும் வரை, அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. தண்ணீரை விடவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் உடனடியாக ஆணையத்தைக் கூட்டுமாறு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா பிரதமர்வாஜ்பாயைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வாஜ்பாயை நேரில் சந்தித்து வலியுறுத்த கிருஷ்ணா இன்று இரவு டெல்லி செல்வார் என்று தெரிகிறது.
நேற்றிரவும் இன்று காலையும் பிரதமர் வாஜ்பாயுடன் தொலைபேசியில் கிருஷ்ணா பேசினார். 9ம் தேதி வாஜ்பாய் அமெரிக்காபுறப்படுவதால் அதற்கு முன்னதாகவே ஆணையத்தைக் கூட்டுவதாக தனக்கு பிரதமர் வாஜ்பாய் உறுதிமொழி அளித்ததாக கிருஷ்ணாகூறினார்.
அப்போது, கர்நாடக அணைக்கட்டுகளில் தண்ணீர் மட்டம் மிகக் குறைவாக உள்ளதால் தொடர்ந்து தமிழகத்துக்கு 1.25 டி.எம்.சி. நீரை விடமுடியாது. எனவே, உடனே ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று வாஜ்பாயை கிருஷ்ணா நிர்பந்தித்தார்.
இதன் மூலம் சில நாட்கள் மட்டும் தமிழகத்துக்கு 1.25 டி.எம்.சி. நீரைத் தந்துவிட்டு, உடனே ஆணையத்தைக் கூட்ட வைத்து அதில்தமிழகத்துக்கு எதிரான முடிவை எடுக்க வைக்க கிருஷ்ணா முயல்கிறார் என்பது தெளிவாகிறது.
அரசியல்ரீதியில் தனக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்புகளை சமாளிக்க கிருஷ்ணா படாதபாடு பட்டு வருகிறார். நேற்று விவசாயிகள் மத்தியில்செல்வாக்கு பெற்ற முன்னாள் பிரதமரும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவே கெளடாவுடன் பேசிய அவர் இன்று முன்னாள்முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான ராமகிருஷ்ண ஹெக்டேவுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தமிழர்களுக்கு எதிரான வன்முறையை முன்னின்று நடத்திய பங்காரப்பா, முன்னாள் முதல்வர்கள் பொம்மை, வீரப்ப மொய்லி,ஆளுநர் சதுர்வேதி ஆகியோருடனும் கிருஷ்ணா இன்று காலை முதல் தொடர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் கிருஷ்ணா பேசுகையில்,
தமிழகத்துக்கு தினமும் தொடர்ந்து 1.25 டி.எம்.சி. நீர் விடும் நிலையில் கர்நாடகம் இல்லை. இதனால் உடனே ஆணையத்தை பிரதமர்வாஜ்பாய் கூட்ட வேண்டும். 9ம் அவர் அமெரிக்கா புறப்படுகிறார். இதனால் முன்னதாகவே ஆணையத்தைக் கூட்டுமாறு அவரிடம்கோரினேன். அவரும் ஒப்புக் கொண்டார்.
காவிரி விவகாரத்தால் இரு மாநிலங்களுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது மேலும் சீர்கெடாமல் இருக்கநடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தமிழகத்துக்கு சுமார் 2 வாரமாவது 1.25 டி.எம்.சி. நீர் வந்தால் தான் சம்பா பயிர்களை உருப்படியாக விளைவிக்க முடியும். அதில்கிருஷ்ணா பாலிடிக்ஸ் செய்தால், தமிழக விவசாயிகள் வாயில் அவர் மண்ணை அள்ளிப் போடுவதாகத் தான் அர்த்தமாகும்.
கர்நாடகத்தில் உள்ள பா.ஜ.க. ஓட்டுகளை மனதில் வைத்துக் கொண்டு மத்திய அரசும் சேர்ந்து இந்த விஷயத்தில் கிருஷ்ணாவுக்கு ஜால்ராபோடாமல் இருப்பது மிக மிக அவசியம்.
கடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு நீரை விடுமாறு கர்நாடகத்துக்கு வாஜ்பாய் உத்தரவிடவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது. நீர் கொடுங்கள் என்று பொத்தாம் பொதுவாகவே பேசினார்.
இதனால், கடைசியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்யும் நிலை ஏற்பட்டது.
வாஜ்பாய் என்ன செய்யப் போகிறார்?:
நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், காவிரி ஆணையக் கூட்டத்தைக் கூட்டி தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தர வேண்டும்என்பதை பிரதமர் வாஜ்பாய் தான் இறுதி முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தை வாஜ்பாய் கூட்டும் வரை தமிழகத்துக்கு தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் தர வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
கிருஷ்ணாவின் நெருக்குதலுக்குப் பணிந்து உடனடியாக காவிரி ஆணையத்தை வாஜ்பாய் கூட்டுவாரா என்று தெரியவில்லை.
கூட்டப்படும் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தொடர்ந்து குறைந்தபட்சம் 1.25 டி.எம்.சி. நீர் கிடைக்கச் செய்ய வேண்டியதுவாஜ்பாயின் கடமையாகும்.
நிபுணர்களுடன் கர்நாடகம் ஆலோசனை:
இதற்கிடையே கர்நாடக அரசு இன்று காவிரி நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தியது. பாசனத்துறை அமைச்சர் பாட்டீல், சட்டஅமைச்சர் சந்திரே கெளடா ஆகியோர் இந்த நிபுணர்களுடன் காலை முதல் ஆலோசனை நடத்தினர்.
இக் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார், முன்னாள் முதல்வர் மொய்லி, ஜனதா தள தலைவர்களான நானையா, சிந்தியா,நஞ்சே கெளடா ஆகியோரும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications