திருச்சி: திமுக பயங்கர கோஷ்டி மோதல்- 5 பேருக்கு அரிவாள் வெட்டு
திருச்சி:
திருச்சியில் திமுகவினரின் இரு கோஷ்டிகள் இடையே நடந்த பயங்கர மோதலில் 5 பேருக்கு அரிவாள் வெட்டுவிழுந்தது. இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி அருகே உள்ளது கம்பரசன்பேட்டை. இந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் குடமுருட்டி சேகர் தலைமையில்திமுக தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது.
அப்போது அங்கு முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலான ஒரு கோஷ்டி வந்தது. அவர்களும்திமுகவினர்தான்.
ஆலோசனைக் குழுக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு ரவிச்சந்திரன் கோஷ்டி கூறியது. ஆனால், அதை ஏற்க சேகர்கோஷ்டி மறுத்தது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.
கத்தி, அரிவாள்களால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். கற்களும் நாற்காலிகளும் பறந்தன. இருதரப்பினரும் வேட்டிகளை உருவி விட்டு அடித்துக் கொண்டனர்.
இதில் சேகர் கோஷ்டியைச் சேர்ந்த 5 பேருக்கு உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பெண்கள் உள்பட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் நடந்தஇடம் வன்முறை நடந்த பகுதி மாதிரி காணப்பட்டது.
சின்னஞ்சிறிய ஊரில் நடந்த இந்த பயங்கர மோதல் அங்கு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோஷ்டியில் ரவிச்சந்திரன் கோஷ்டி அழகிரி ஆதரவு கொண்டது என்று தெரிகிறது. சேகர் கோஷ்டிஸ்டாலினை ஆதரித்து வருகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications