புலிகள்: தடை நீக்கத்துக்கு தமிழர் கட்சிகள், அமெரிக்கா ஆதரவு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதை பெரும்பாலான தமிழர் கட்சிகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவும் இந்ததடை நீக்கத்தை வரவேற்றுள்ளது.
புலிகளும் இன்று தான் தடை நீக்கத்தை அதிகாரப்பூர்வமாக வரவேற்றுள்ளனர்.
ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனா இந்தத் தடை நீக்கத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.
4 முக்கிய தமிழ் கட்சிகள் அடங்கிய தமிழ் தேசியக் கூட்டணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தடை நீக்கத்தை நாங்கள் முழுமனதோடு ஆதரிக்கிறோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் அமைதி முயற்சிகளுக்கு அதிபர் சந்திரிகா முழு ஆதரவு தரவேண்டும்.
அதில் முட்டுக்கட்டை போட சந்திரிகாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஜனதா விமுக்தி பெரமுனாபோன்ற இனவாத அமைப்புகளின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அமைதி முயற்சியை சந்திரிகா கெடுக்கக் கூடாது என்று அதில்கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் செயலாலர் சம்பந்தன் கையெழுத்திட்டுள்ளார்.
லண்டணில் பி.பி.சிக்கு பேட்டியளித்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர், இந்தத் தடை நீக்கத்தின் மூலம் மிகப் பெரியமுட்டிக்கட்டை நீங்கிவிட்டதாகக் கூறினார்.
பெரமுனா எதிர்ப்பு:
இதற்கிடையே இந்தத் தடை நீக்கத்தை எதிர்த்து தெருக்களில் இறங்கி போராடப் போவதாக சிங்கள இனவாத அமைப்பானஜனதா விமுக்தி பெரமுனா மிரட்டியுள்ளது.
அதிபர் சந்திரிக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி புலிகள் மீது மீண்டும் தடையை அமலாக்க வேண்டும் எனவும், புலிகளின்வரி வசூல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்கா ஆதரவு:
ஆனால், புலிகள் மீதான தடையை இலங்கை அரசு நீக்கியதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்காவில்புலிகள் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீவிரவாதத்தை புலிகள் முழுவதுமாககைவிடும் வரை அமெரிக்காவின் தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தடை தொடரும்:
புலிகள் மீதான தடையை நீக்கப் போவதில்லை என இந்தியா தெரிவித்துவிட்டது. அதே போல பிரிட்டனும் தடையை நீக்கமாட்டோம் என அறிவித்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு இடம் தேர்வு:
இதற்கிடையே தாய்லாந்தில் பேச்சு நடத்தப்படும் இடத்தை புலிகளும் இலங்கை அரசும் முடிவு செய்துவிட்டன. தாய்லாந்துநாட்டின் யோசனைப்படி அந் நாட்டில் உள்ள சத்தாஹிப் என்ற இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications