மேட்டூர் அணை திறப்பு

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

கர்நாடகத்தின் கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்று வெள்ளிக்கிழமை மேட்டூர்அணைக்கு வந்து சேரும்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி செவ்வாய்கிழமை நள்ளிரவில் இருந்து கடந்த இரு நாட்களாக 1.25 கன அடி நீர்கர்நாடகத்தில் இருந்து திறந்து விடப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 168 கிமீ தூரத்தையும், தமிழகத்தில் 82 கிமீ தூரத்தையும் கடந்து வரும் காவிரி நீர் வெள்ளிக்கிழமைநள்ளிரவில் மேட்டூர் வந்து சேருகிறது.

இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் 66.84 அடி நீர் இருப்பு இருந்தது. அணைக்குவினாடிக்கு 2,227கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 2400 திறந்து விடப்படுகிறது.

இதற்கிடையே, மேட்டூர் அணையிலிருந்து தஞ்சாவூரில் சம்பா சாகுபடிக்காக மாலை 6 மணிக்கு தண்ணீர்திறக்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் அணையைத் திறந்துவிட்டார்.

இங்கிருந்து இன்று மாலை முதல் மணிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும். பின்னர் படிப்படியாக இது15,000 அடியாக உயர்த்தப்படும்.

இந்த நீர் 10ம் தேதி திருச்சி கல்லணையை அடையும். அங்கிருந்து வெண்ணாறு கால்வாய், கொள்ளிடம் கால்வாய்,கல்லணைக் கால்வாய் வழியாக காவிரிப் பாசனப் பகுதிகளுக்குச் செல்லும்.

கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வருவதைப் பொறுத்து மேட்டூரில் நீர் திறந்துவிடப்படுவது அதிகரிக்கப்படும் எனஅரசு அறிவித்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+