ஸ்டாலின் பதவியும் போச்சு.. சட்டமும் போச்சு
சென்னை:
ஸ்டாலின் பதவியைப் பறிப்பதற்காக தமிழக அரசு கொண்டு வந்த ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தைசென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி விதிகளுக்கு மாறாக இரண்டாவது முறையாக ஸ்டாலின் மேயரானதும்தவறு என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
இதனால் அந்தச் சட்டம் காலியாகிறது. அதே நேரத்தில் ஸ்டாலின் மீண்டும் மேயராகும் வாய்ப்பையும் இழந்தார்.
சென்னை மேயராக இருந்த ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தைதமிழக அரசு கொண்டு வந்தது. இதையடுத்து ஸ்டாலினின் மேயர் பதவி பறிபோனது.
இந்த சட்டத்தை எதிர்த்து வக்கீல் உதயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி விதிகளின்படி ஒருவர் ஒருமுறை தான் மேயராக இருக்க முடியும். கடந்தமுறை இந்த விதியை மீறி ஸ்டாலின் இரண்டாவது முறையாக பதவியேற்றார். இதை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்தகுமார் என்பவரும் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த இரு வழக்குகளையும் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கியமுதலாவது பெஞ்ச் விசாரித்து வந்தது.
அவர்கள் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை மேயர் பதவிக்கு தேர்தல்நடத்தக் கூடாது, அந்தப் பதவியைக் காலியாக வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து கராத்தே தியாகராஜனை மேயராக முடியாமல் பொறுப்பு மேயராகவே செயல்பட்டு வருகிறார்.
இந் நிலையில் நேற்று மாலை இந்த இரு வழக்குகளிலும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில்,
தமிழக அரசு கொண்டு வந்த ஒருவருக்கு ஒரு பதவி சட்டம் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, அந்தச்சட்டம் செல்லாது.
அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி விதிப்படி ஒருவர் ஒருமுறை தான் மேயராக இருக்க முடியும். இந்த விதியைஸ்டாலின் மீறி இரண்டாவதாக பதவி ஏற்றுள்ளது. இதனால் அவர் மேயராக பதவியேற்ரதும் செல்லாது.
இதனால் ஸ்டாலின் வகித்த மேயர் பதவி இன்று முதல் காலியாகிறது என்று தீர்ப்பளித்தனர்.
இதனால் 6 மாதத்துக்குள் சென்னை மேயர் பதவிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications