ரஜினியை காட்டுக்குள் அனுப்ப வேண்டும்
சென்னை:
நாகப்பாவை மீட்க ரஜினியை காட்டுக்குள் அனுப்பி வீரப்பனுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று தடை செய்யப்பட்ட தமிழர் விடுதலைப்படையின் தலைவர் மாறன் கூறினார்.
தமிழர் விடுதலைப் படை அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பு. வீரப்பனுடன் சில ஆண்டுகளுக்கு முன் உறவு ஏற்படுத்திக் கொண்டது.வீரப்பனைத் தங்களது தலைவராகவும் அது அறிவித்துள்ளது.
இந்த அமைப்பின் தலைவர் மாறன், ராஜ்குமார் காட்டுக்குள் இருந்தபோது, மாறனும் உள்ளேயே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மாறன் தற்போது கைதாகி பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திண்டிவனம் அருகே சமீபத்தில் ஒரு ரயில் நிலையத்தில் குண்டு வெடித்தது. இதுதொடர்பாக மாறன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஆஜராவதற்காக பூந்தமல்லி சிறையில் இருந்து செங்கல்பட்டு கோர்ட்டுக்கு மாறன் அழைத்து வரப்பட்டிருந்தார்.
நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு வெளியே வந்த மாறன் செய்தியாளர்களைப் பார்த்து ஆவேசமாக பேசினார். எங்களதுகோக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஆயுதம் ஏந்திப் போராடவும் தயங்க மாட்டோம்.
எங்கள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலைப் புலிகள் மீதான தடையும் நீக்கப்பட வேண்டும். காவி தண்ணீரைதமிழகத்திற்கு உடனடியாக கொடுக்க வேண்டும்.
ரஜினியை காட்டுக்குள் அனுப்பி வீரப்பனுடன் பேசி நாகப்பாவை மீட்டுக் கொள்ளுங்கள். அவர்தான் அதற்கு சரியான ஆள் என்றார்மாறன்.
-->
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications