மேட்டூ ரில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வினாடிக்கு 12,000 கன அடியாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
அணையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர்ராதாகிருஷ்ணன் மடைகளைத் திறந்துவிட்டு தண்ணீர் திறப்பை துவக்கி வைத்தார்.
துவக்கத்தில் 5000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. சனிக்கிழமை காலை முதல் இது 12,000 கன அடி நீராகஅதிகரிக்கப்பட்டது. மேட்டூரில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 9ம் தேதி கல்லணைக்குப் போய்ச் சேரும்.
அடுத்த நாள் அங்கிருந்து தஞ்சைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். 8 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான சம்பாபயிர்கள் இதனால் பலனடையவுள்ளன.
-->












Click it and Unblock the Notifications