காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழு கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வருகிற 14ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.
தமாகாவும், காங்கிரஸும் இணைந்த பிறகு கட்சியை நிர்வகிக்க இடைக்கால நிர்வாகமாக இந்த ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டது.
இதில் அனைத்து கோஷ்டிகளும் இடம் பெற்றுள்ளன. அதன் பிறகு ஒரு முறை இந்தக் குழு கூடிப் பேசியது.தற்போது இரண்டாவது முறையாக வருகிற 14ம் தேதி இக்குழுவின் கூட்டம் நடைபெறவுள்ளது.
அகில இந்திய பொதுச் செயலாளர் ஆஸ்கர் பெர்னாண்டஸ், செயலாளர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர்இக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
கட்சிக்கு நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக முக்கிய ஆலோசனை இக்கூட்டத்தில் நடைபெறும் என்றுகூறப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications