காவிரியில் நிரம்பி ஓடும் அரசியல்
பெங்களூர்:
தமிழகத்தைவிட கர்நாடகத்தில் பா.ஜ.கவுக்கு அதிக ஓட்டுக்கள் உள்ளதால் காவிரி விவகாரத்தில் அந்த மாநிலத்துக்கு ஆதரவாக பிரதமர்வாஜ்பாய் நடந்து கொண்டுள்ளார்.
இதன்மூலம் ஓட்டு அரசியல் நடத்துவதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்தது அல்ல பா.ஜ.க. என்பதை வாஜ்பாய்நிரூபித்துள்ளார்.
குறுவை நெல் சாகுபடியை முழுக்க முழுக்க இழந்து நிராதரவாய் நிற்கிறது. நெல் விளைவித்த விவசாயிகள் கூலி வேலை தேடிஆந்திராவுக்கும் கேரளாவுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந் நிலையில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருப்பதால் தான் இரு மாநில அணைக்கட்டுகளிலும் உள்ள நீரின் அளவை ஆராய்ந்துவிட்டுதினமும் கர்நாடகம் 1.25 டி.எம்.சி. நீர் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறைந்தபட்ச அளவாக இந்த நீர் தமிழகத்துக்குத் தேவைப்படுவதை நீதிமன்றம் உணர்ந்து அந்தத் தீர்ப்பைத் தந்தது. அந்தத் தீர்ப்பைக் கூடமதிக்காமல் ஒரு நாள் கழித்துத் தான் கர்நாடகம் தண்ணீர் விட்டது.
இந்த நீர் தமிழகத்துக்கு வந்து சேருவதற்குள் வாஜ்பாயை நிர்பந்தித்து காவிரி ஆணையத்தைக் கூட்டச் செய்து தமிழகம் பயந்தது போலவேநீரின் அளவைக் குறைப்பதில் கர்நாடகம் வெற்றி பெற்றுள்ளது.
வாஜ்பாய் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னதாகவே காவிரி ஆணையத்தைக் கூட்டி கர்நாடகத்துக்கு ஆதரவாகத் தீர்ப்பு தந்ததன் மூலம்பா.ஜ.கவின் அரசியல் புத்தி வெளிப்பட்டுவிட்டது.
கர்நாடகத்தில் இப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அடுத்து பலத்துடன் இருக்கும் முக்கிய கட்சி பா.ஜ.க. தான். ஜனதா தளம்சிதறுண்டு கிடப்பதால் பா.ஜ.கவுக்கு இங்கே ஆட்சியைப் பிடிக்க நல்ல வாய்பபுள்ளது.
அந்த வாய்ப்பை எக் காரணம் கொண்டும் கெடுத்துக் கொள்ள பா.ஜ.க. விரும்பவில்லை. இதனால் தான் மிகத் துணிவாக தமிழகத்துக்குஎதிராகவும் கர்நாடகத்துக்கு ஆதரவாகவும் முடிவு எடுத்துள்ளார்கள்.
தமிழகத்துக்கு தண்ணீர் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் அதற்கு முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது கர்நாடக பா.ஜ.கவின்சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் அமைச்சராக உள்ள ஆர்.எஸ்.எஸ்சைச் சேர்ந்த அனந்தகுமார் உள்ளிட்ட கர்நாடக மாநில பா.ஜ.கவினரின் தீவிர நிர்பந்துக்குப்பணிந்து தமிழக்ததுக்கு எதிரான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
மேலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மாதிரி அனைவரையும் எடுத்தெறிந்து பேசாமல் கர்நாடக மாநில முதல்வர் கிருஷ்ணா அனைத்துக்கட்சியினருடனும் பேச்சு நடத்தினார். அவர் காங்கிரஸ் கட்சிக்காரராக இருந்தாலும் தனது மாநில பா.ஜ.கவினரின் ஆதரவைக் கேட்டுப்பெற்றார்.
அவர்கள் மூலமாக பிரதமர் வாஜ்பாய்க்கு அழுத்தம் தந்தார். குறிப்பாக மத்திய அமைச்சர் அனந்தகுமாரைத்தான் அவர் பெரிதும்நம்பியிருந்தார். அவர் மூலமாக பிரதமருக்கு மிக நெருக்கமான அமைச்சர் பிரமோத் மகாஜனிடம் இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டது.
அடுத்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளதால் கர்நாடகத்திற்கு சாதகமாகவே முடிவு எடுக்கும்படி மகாஜன் உள்ளிட்டபா.ஜ.க. மூத்த தலைவர்கள் பிரதமருக்கு எடுத்துக் கூறினர்.
இப்போது வாஜ்பாயின் தீர்ப்பின் மூலம் காவிரியில் 0.8 டி.எம்.சி. நீர் தான் தமிழகத்துக்கு வரும். இந்த நீர் மிகக் குறைவானது. வெயிலில்ஆவியானது தவிர, கர்நாடக விவசாயிகளின் மணல் மூட்டைத் தடைகளைத் தாண்டி தினமும் இதில் பாதி நீர் கூட தமிழகத்துக்கு வரப்போவதில்லை.
இதற்கு தமிழக பா.ஜ.கவினர் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும் தேசியம் பேசும் பா.ஜ.கவினர்நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நியாயம் வைத்துக கொண்டுள்ளது அவர்களது இரட்டை நிலையைத் தான் காட்டுகிறது.
பா.ஜ.கவினர் ஒரு புறம் இருக்கட்டும். மத்திய அரசை ஆதரிக்கும் திமுக தலைவர் கருணாநிதி என்ன சொல்லப் போகிறார்? தமிழகத்துக்கு நீர்குறைக்கப்பட்டதை ஆதரிக்கிறாரா?
கர்நாடகத்தின் செயல் தமிழகத்தைப் பட்டினி போடும் முயற்சியாகத் தான் கருதப்பட வேண்டும். அதை மத்திய அரசு அரசியல்காரணத்துக்காக ஆதரிக்கிறது.
நமது பேப்பர்- பேனா, அடுக்கு மொழி வசன அரசியல்வாதிகளால் இந்த விவகாரத்தில் நியாயம் பெற்றுத் தர முடியாது.
மீண்டும் நீதிமன்றம் செல்வது தான் ஒரே வழி.
காவிரியில் நீரை விட அரசியல் தான் அதிகம் ஓடுகிறது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications