அடுத்த 10 நாட்களில் 10,000 ஆசிரியர்கள் நியமனம்: தம்பிதுரை தகவல்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

தமிழகத்தில் இன்னும் 10 நாட்களில் சுமார் 10,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாக மாநிலகல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறினார்.

நாகர்கோவிலில் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் 15,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கைஎடுத்து வருகிறது.

இன்னும் 10 நாட்களில் 10,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டு விடும். அதன் பிறகு மீதமுள்ள பணியிடங்களும்நிரப்பப்படும்.

40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசிடம் உத்தேசம் எதுவும்இல்லை.

67 அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பதால் மாணவர்களுக்கோ அல்லதுஆசிரியர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வரப் போவதில்லை.

அப்படி இணைத்தால், பச்சாவத் கமிஷன் பரிந்துரையின்படி கூடுதல் நிதி கிடைக்கும். எனவே சம்பளம்குறையுமோ, படிப்புக் கட்டணம் அதிகரிக்குமோ என்று ஆசிரியர்களும் மாணவர்களும் கவலைப்படத்தேவையில்லை என்றார் தம்பிதுரை.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+