காவிரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்திற்கு காவிரியில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட கர்நாடகஅரசை வலியுறுத்துமாறு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்றுதெரிகிறது.

காவிரியில் தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு கடந்த வாரம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து காவிரி நதி நீர் ஆணையம் கடந்த 8ம் தேதி கூட்டப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் காவிரியில்தினமும் 0.8 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

ஆணையத்தின் இந்த முடிவை தமிழக அரசு கடுமையாக எதிர்த்தது. மேலும் ஆணையத்தில் இந்த உத்தரவை ரத்துசெய்யுமாறு கோரியும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தினமும் 1.25 டி.எம்.சி. நீரை திறந்து விடுமாறு கர்நாடகஅரசை வலியுறுத்தக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவ்விசாரணைநாளை தான் நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பட்நாயக் இன்று தெரிவித்தார்.

இதற்கிடையே காவிரியில் கர்நாடக அணைகளிலிருந்து ஒரு சொட்டு நீரைக் கூட திறந்து விடக் கூடாது என்று சிலகன்னட அமைப்புகள் இன்று பெங்களூரில் 12 மணி நேர பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

தமிழக அரசுடன் ஒத்துழைக்க ரெடி - பாமக:

இந்நிலையில் காவிரி பிரச்சனையில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராகஇருப்பதாக பாமக அறிவித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் அதிமுகவைத் தவிர எந்தக் கட்சியும் அக்கறையுடன் செயல்படவில்லை என்றுதமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தான் எதிர்க் கட்சிகளைக் குற்றம் சாட்டியிருந்தார்.

மத்திய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த 10 அமைச்சர்கள் இருந்த போதிலும் பிரதமர் வாஜ்பாய்தலைமையிலான காவிரி ஆணையத்தின் முடிவை எதிர்க்க எந்த அமைச்சருமே முன் வரவில்லையே என்றும்ஜெயலலிதா கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய மத்திய ரயில்வே இணை அமைச்சரும் பாமகதலைவர்களில் ஒருவருமான மூர்த்தி, எங்களை முறைப்படி அழைத்துப் பேசினால் காவிரி விவகாரத்தில்மட்டுமல்ல எந்த விவகாரத்திலும் அரசுடன் ஒத்துழைக்க தயாராகவே இருக்கிறோம் என்று கூறினார்.

மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் தான் சந்தித்துப்பேசினார் என்றும் மூர்த்தி குறிப்பிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+