சேலத்தில் கொள்ளையர்கள் அட்டகாசம்: காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சேலம் மாநகர காங்கிரஸ் தலைவரை கடப்பாரையால் தாக்கியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்த ஒருகும்பல் அவரது வீட்டிலிருந்த நகை, பணத்தை திருடிக் கொண்டு தப்பியது.

சேலம் மாநகர காங்கிரஸ் தலைவராக இருந்தவர் தாளமுத்து நடராஜன். இவரது வீட்டிற்கு இன்று (வியாழக்கிழமை)அதிகாலை 10 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்தது.

வீட்டிற்கு காவல் இருந்த காவலாளி இவர்களை யார் என்று கேட்டபோது அக்கும்பல் கடப்பாரையால்காவலாளியை குத்திக் கான்றது. பின்னர் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்றனர்.

அப்போது சப்தம் கேட்டு எழுந்து வந்த தாளமுத்து நடராஜன், தன்னிடமிருந்த துப்பாக்கியால் அக்கும்பலைநோக்கிச் சுட்டார். ஆனால் சாமர்த்தியமாக விலகிக் கொண்ட அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரிடமிருந்ததுப்பாக்கியைப் பறித்தனர்.

பின்னர் கடப்பாரையால் தாளமுத்து நடராஜனைக் குத்தினர். பிறகு அவருடைய துப்பாக்கியாலே அவரைசரமாரியாகச் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்தார் நடராஜன்.

கும்பலைத் தடுக்க முயன்ற நடராஜனின் இரு மகன்களுக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் அக்கும்பல் வீட்டிலிருந்தநகை, பணத்தை எடுத்துக் கொண்டு தப்பியது. தாளமுத்து நடராஜன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது சேலத்தில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும்ஏற்படுத்தியுள்ளது.

சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது - இளங்கோவன்:

இந்நிலையில் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதையே தாளமுத்து நடராஜனின் படுகொலைச்சம்பவம் விளக்குவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

தாளமுத்து நடராஜனின் இல்லத்திற்குச் சென்ற இளங்கோவன் அங்கு அவருடைய உடலுக்கு மாலை அணிவித்துஅஞ்சலி செலுத்தினார். பின்னர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தாளமுத்து நடராஜனின் படுகொலைச் சம்பவம் தமிழகத்தில்சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயுள்ளதையே காட்டுகிறது என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+