வெற்றிகரமாக ஏவப்பட்டது "மெட்சாட்" செயற்கைக்கோள்
ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரா):
இந்தியாவின் முதல் வானிலை செயற்கைக்கோளான "மெட்சாட்" செயற்கைக்கோள் இன்று மாலை 3.57 மணிக்குவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. வரிசையில் லேட்டஸ்ட் ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.-சி4 இந்த செயற்கைக்கோளைஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்திஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து சுமந்து சென்றது.
சுமார் 1,050 கிலோ எடை கொண்ட "மெட்சாட்" செயற்கைக்கோள் புறப்பட்ட 21வது நிமிடத்திலேயே (மாலை 4.18மணிக்கு) பூமியிலிருந்து 36,000 கி.மீ. உயரத்தில் உள்ள புவி வட்டப் பாதையில் செலுத்தப்பட்டு விட்டது.
வழக்கமாக பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் 800 கி.மீ. உயரத்தில் உள்ள துருவ வட்டப் பாதையில் தான்செயற்கைக்கோள்களை ஏவும் தன்மை கொண்டவை.
ஆனால் அந்தப் பாதையையும் தாண்டி "மெட்சாட்" செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் செலுத்த இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகள் இம்முறை முயற்சிகளை மேற்கொண்டனர். அதற்குத்தகுந்தவாறு பி.எஸ்.எல்.வி.-சி4 ராக்கெட்டும் புதிதாக வடிவமைக்கப்பட்டது.
மேலும் 1,000 கிலோவுக்கு அதிகமாக உள்ள ஒரு செயற்கைக்கோளை ஒரு பி.எஸ்.எல்.வி. ராக்கெட் சுமந்துசெல்வதும் இது தான் முதல் முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
"மெட்சாட்" செயற்கைக்கோளின் மூலம் நாம் வானிலை விவரங்களை வெகு வேகமாகத் தெரிந்து கொள்ள முடியும்.புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படவிருப்பதை முன்னதாகவே நம்மால் தெரிந்து கொள்ளமுடியும்.
"மெட்சாட்" செயற்கைக்கோளை ஏவுவதற்காக "இஸ்ரோ" ரூ.75 கோடி செலவிட்டுள்ளது. ஆனால் ஏரியன் போன்றவெளிநாட்டு ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை நாம் ஏவும் போது இதை விட பல மடங்கு தொகைசெலவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் நூற்றுக்கணக்கான "இஸ்ரோ" விஞ்ஞானிகளும் பத்திரிக்கைநிருபர்களும் "மெட்சாட்" செலுத்தப்படுவதை நேரில் பார்வையிட்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications