பிகார் ரயில் விபத்து: சாவு எண்ணிக்கை 106 ஆக உயர்வு
ரபிகஞ்ச் (பிகார்):
பிகார் ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 106 ஆக உயர்ந்துள்ளது. உடல்களை மீட்கும் பணிஇன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹவுராவிலிருந்து கடந்த திங்கள்கிழமை டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்அன்று இரவு 10.40 மணிக்கு பிகார் மாநிலத்தின் ரபிகஞ்ச் அருகே தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்தது.
ஏராளமான பெட்டிகள் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கியதால் ஏராளமான உயிர்ச் சேதம் ஏற்பட்டது.
கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மூழ்கிய பெட்டிகளில்உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பலர் மீட்கப்பட்டனர்.
ஆனாலும் மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இனிமேலும் மூழ்கிய பெட்டிகளில் யாரும் உயிருடன்இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதையடுத்து அவற்றில் உள்ள சடலங்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
இதுவரை 106 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான உடல்கள் மூழ்கிய பெட்டிகளுக்குள்சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.
மீட்கப்பட்டவற்றில் 93 உடல்கள் அடையாளம் காணப்பட்டு சம்பந்தப்பட்ட உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டுள்ளன. மற்ற உடல்கள் கயா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே சேதமடைந்த ரயில் பாதையைச் செப்பனிடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இன்றுமாலைக்குள் இந்த ரயில் பாதை மீண்டும் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-->












Click it and Unblock the Notifications