தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம்
பெங்களூர்:
பெங்களூரில் இன்று நடைபெறும் பந்த்தையொட்டி இந்நகரில் உள்ள கேபிள் டி.விக்களில் தமிழ் சேனல்களின்ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இங்கு சுமார் 45 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் தமிழர்கள் தான் என்பதால், பெரும்பாலும் இந்நகரின்அனைத்துப் பகுதிகளிலும் சன் டி.வி. முதல் ஜெயா டி.வி. வரை அனைத்து தமிழ் சேனல்களுக்கும் இணைப்புகள்கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்திற்கு காவிரியில் ஒரு சொட்டு நீர் கூடத் தரக் கூடாது என்பதை வலியுறுத்தி சில கன்னடஅமைப்புகளும், நடிகர் ராஜ்குமார் ரசிகர் மன்றமும் மற்றும் சில சினிமா அமைப்புகளும் பெங்களூரில் இன்று பந்த்நடத்துகின்றனர்.
இந்த பந்த்திற்கு பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் போன்ற கட்சிகளும் ஆதரவுதெரிவித்துள்ளன.
இதையடுத்து பெங்களூரில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள்,வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
பெங்களூர் மாநகரப் போக்குவரத்துக் கழகமும் இன்று பஸ்களை இயக்கவில்லை. இதனால் பல பஸ்நிலையங்களிலும், பஸ் நிறுத்தங்களிலும் ஏராளமான மக்கள் பஸ் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் பங்க்குகள் கூட மூடப்பட்டுள்ளன.
ஆனாலும் அத்தியாவசியத் தேவைகளான பால் விநியோகம் மற்றும் குடிநீர் விநியோகம் ஆகியவைபாதிக்கப்படவில்லை. மருத்துவமனைகளும் திறக்கப்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் பெங்களூர் முழுவதும் இன்று தமிழ் சேனல்களின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.
காலை 6 மணிக்கே இந்த ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் பந்த் காரணமாக வேலைக்குப் போகமுடியாமல் வீட்டுக்குள் அடைபட்டுள்ள தமிழர்கள் தமிழ் டி.வி. நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதற்கிடையே பெங்களூர் மிகவும் பதற்றமாகக் கருதப்படும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதால் இது வரை எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை.
இதற்கிடையே காவிரிப் பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதல்வர் கிருஷ்ணா நேற்று மாலை கூட்டியிருந்தஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. இன்று பந்த் நடத்தும் கன்னடஅமைப்புகள் நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி!












Click it and Unblock the Notifications