காவிரி வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
காவிரியில் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய நீரின் அளவைக் குறைத்து அறிவித்தது ஏன் என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 3ம் தேதி உச்ச நீதிமன்றம்கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் கடந்த 8ம் தேதி டெல்லியில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி நதி நீர் ஆணையம், 0.8டி.எம்.சி. நீரை மட்டுமே திறந்துவிட உத்தரவிட்டது.
ஆணையத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் தினமும் 1.25 டி.எம்.சி. நீரைத் திறந்து விட வேண்டும்என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை உறுதி செய்யக் கோரியும் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றை நேற்று தாக்கல்செய்தது.
மேலும் கடந்த 11ம் தேதி வரை கர்நாடக அணைகளிலிருந்து வர வேண்டிய 6.25 டி.எம்.சி. அளவு நீரில் 2.03டி.எம்.சி. நீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்துள்ளது என்றும் மீதமுள்ள 4.22 டி.எம்.சி. நீரையும்உடனடியாக விடுவிக்க கர்நாடக அரசுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
இம்மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.என். கிர்பால் தலைமையிலான பெஞ்ச் முன்பாக இன்று விசாரணைக்குவந்தது.
தமிழக அரசின் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், உச்ச நீதிமன்ற உத்தரவின் படிதிறந்துவிடப்பட வேண்டிய நீரின் அளவில் பாதி அளவு கூட இன்னும் மேட்டூர் அணைக்குத் திறக்கப்படவில்லைஎன்று கூறி வாதாடினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை மொத்தம் 6.25 டி.எம்.சி. நீரும், பின்னர் 8ம்தேதி கூடிய காவிரி ஆணையத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3.20 டி.எம்.சி.நீரும் கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூருக்குத் திறந்துவிடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய வேணுகோபால்,ஆனால் மொத்தமே இதுவரை 2.9 டி.எம்.சி. நீர் மட்டுமே மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளதாகக்கூறிப்பிட்டார்.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பான சில விளக்கங்களைக் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.
வரும் 23ம் தேதிக்குள் இந்த விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் முகுல் ரோஹட்டாகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications