மதுரை போலீசாருக்கு மீண்டும் "அல்வா": மருத்துவமனையிலிருந்து தப்பிய கைதி
மதுரை:
மதுரை சிறையிலிருந்து கைதி ஒருவனை சிகிச்சைக்காக மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது அவன்போலீசாரை ஏமாற்றி விட்டுத் தப்பிவிட்டான்.
மதுரை போலீஸாரின் பிடியிலிருந்து கைதிகள் தப்புவது சகஜமாகி விட்டது. இமாம் அலி தப்பியதற்குப் பிறகுமற்றொரு முக்கியமான கைதி போலீஸாரின் பிடியிலிருந்து தப்பியுள்ளான்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் உருமாட்டி தேவர். இவரது மகன் மணிகண்டன். திருட்டு வழக்கு ஒன்றில் கைதுசெய்யப்பட்டிருந்த மணிகண்டன் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன.
கைது செய்யப்பட்டிருந்த மணிகண்டன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில்அவனது ரிமாண்ட் காலத்தை நீட்டிப்பதற்காக போலீஸார் அவனை கோர்ட்டுக்கு கொண்டு சென்றனர்.
அப்போது போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி திடீரென்று ஓடத் தொடங்கினான் மணிகண்டன். அதிர்ச்சியடைந்தபோலீஸார் உடனடியாக சுதாரித்துக் கொண்டு துரத்தினர்.
மாட்டுத் தாவணி பஸ் நிலையம் வரை ஓடிய மணிகண்டன், போலீஸாரிடம் வகையாகச் சிக்கிக் கொண்டான்.பின்னர் மீண்டும் சிறைக்குக் கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டான்.
இந்நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று மணிகண்டன் கூறவே அவனை போலீசார் மருத்துவனைக்குக்கொண்டு சென்றனர். அங்கு சில பரிசோதனைகள் செய்யுமாறு டாக்டர்கள் கூறியிருந்தனர்.
அப்போது கைவிலங்கிடப்படாத நிலையில் இருந்த மணிகண்டன், மருத்துவமனையிலிருந்து திடீரென்று தப்பிவிட்டான். இந்த முறை போலீஸாரால் மணிகண்டனைப் பிடிக்க முடியவில்லை.
தப்பியோடிய மணிகண்டனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications