3வது அணி வேண்டும்: ப.சி. மீண்டும் வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் 35 ஆண்டு கால திராவிட இயக்கங்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர 3வது அணி உருவாகவேண்டியது மிகவும் அவசியம் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவர் சிதம்பரம் கூறினார்.

காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடந்தது.கூட்டத்தின் போது சிதம்பரம் பேசுகையில்,

தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்து வந்த கடந்த 35 ஆண்டு காலத்தில் பொருளாதாரம் மிகவும்மோசமாகச் சீரழிந்து விட்டது.

எனவே இதை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு மூன்றாவது அணி அமைய வேண்டியதுஅவசியம்.

மூன்றாவது அணி அமைவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்சிதம்பரம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்த பின் புதிய அரசியல் சார்பற்ற அமைப்பை ஆரம்பித்தார் சிதம்பரம்.அதன் பின்னர் கடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அதை காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அரசியல்கட்சியாக மாற்றினார்.

தற்போது கட்சியின் மாநிலசெயற்குழுக் கூட்டத்தை சிதம்பரம் கூட்டியுள்ளார். கட்சியின் வருங்காலம் மற்றும்அரசியல் நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளன.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+