காவிரி: வாஜ்பாய் செய்தது சரியே - பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காவிரிப் பிரச்சினையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குமுதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அகில இந்திய பா.ஜ.க. செயலாளர் ராஜா கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு பிரதமர் வாஜ்பாய் துரோகம் இழைத்து விட்டதாக ஜெயலலிதா கூறுவதுசரியல்ல.

கர்நாடகத்தின் தரப்பில் 0.5 டி.எம்.சி. நீர் மட்டுமே தர முடியும் என்று வாதிட்டபோது, பிரதமர் தலையிட்டுத் தான்0.9 டி.எம்.சி. நீர் தருவதற்கு ஒப்புக் கொள்ள வைத்தார். இதில் பிரதமர் நடுநிலையோடுதான் செயல்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில் காவிரி சம்பந்தமான பிரச்சினைகளில் அம்மாநல முதல்வர் கிருஷ்ணா தனித்து செயல்படுவதில்லை.எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது வழிகாட்டுதலின் பேரில் தான் செயல்படுகிறார்.

அதேபோல, தமிழகத்திலும் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும்என்றார் ராஜா.

இதேபோல, சட்டசபையை உடனடியாகக் கூட்டி காவிரிப் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமி மற்றும் சிவபுண்ணியம் ஆகியோரும் ஜெயலலிதாவுக்குக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+