பாவாணன் மீது மற்றொரு "பொடா" வழக்கு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை பாவாணன் மீது இன்னொரு பொடா வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக பாவாணன் கைது செய்யப்பட்டு கோயம்புத்தூர் சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் இன்று (சனிக்கிழமை)ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அவரது காவலை 24ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில் சென்னை ஆனந்த் தியேட்டரில் நடந்த கூட்டத்தில் புலிகளை ஆதரித்து பாவாணன் பேசியதாக புதுவழக்கு ஒன்று அவர் மீது போடப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதே வழக்கிலும் அவர் 24ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்று போலீஸாருக்குநீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மீண்டும் கோயம்புத்தூர் சிறைக்கு பாவாணன் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications