வள்ளியூரில் பள்ளி மாணவர்களிடையே மோதல்: வெடிகுண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
வள்ளியூர்:
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலின்போது வெடிகுண்டுகள் வீசப்பட்டது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளியூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே கடந்த 9ம் தேதி பெரும் மோதல் மூண்டது.
இதில் ஒரு தரப்பு மாணவர்கள் எதிர் கோஷ்டியினர் மீது வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதையடுத்துவகுப்பறையில் உட்கார்ந்திருந்த மற்ற மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இச்சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெடிகுண்டு வீசியது குறித்து அப்பள்ளி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications