மேலும் 18 கோவில்களில் இன்று முதல் அன்னதானத் திட்டம்
சென்னை:
கோவில் அன்னதானத் திட்டத்திற்கு தொடர்ந்து நிதி குவிந்து கொண்டிருப்பதால் மேலும் 18 கோவில்களுக்குஅன்னதானத் திட்டத்தை நீட்டிப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 23ம் தேதி ஜெயலலிதா இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலில் 63 கோவில்களில் இதுதொடங்கப்பட்டது. அதன் பிறகு மேலும் 63 கோவில்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மேலும் 18 கோவில்களுக்கு இது விரிவுபடுத்தப்படவுள்ளது. முன்னாள் முதல்வர் பேரறிஞர்அண்ணாவின் பிறந்த நாளான இன்று முதல் இந்தக் கோவில்களில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இத்துடன் மொத்தம் 144 கோவில்களில் அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அன்னதானத்திட்டத்திற்கு பொதுமக்களும்,தொழிலதிபர்களும், பக்தர்களும் தாராளமாக நிதி வழங்குமாறுஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் காளிகாம்பாள் கோவில், திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் புதிதாகஅன்னதானம் வழங்கப்படவுள்ளது.
அன்னதானம் வழங்காத அதிகாரிக்கு வெட்டு:
இந்நிலையில் திருவாரூர் அருகே அன்னதானம் தர மறுத்த கோவில் அதிகாரி அரிவாளால் வெட்டப்பட்டார்.
திருவாரூர் அருகே உள்ள திருகரவாசல் கோவிலுக்கு திருத்துரைப்பூண்டியைச் சேர்ந்த மணி என்பவர் வந்துஅன்னதானத் திட்டத்தின் கீழ் தனக்கு சாப்பாடு தருமாறு கோரியுள்ளார்.
ஆனால் அந்தக் கோவிலில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கோவில் அதிகாரிராமச்சந்திரன் கூறினார்.
அதைக் கேட்க மறுத்த மணி, கோபமடைந்து திடீரென்று ராமச்சந்திரனை அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பினார்.உடனே ராமச்சந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தலைமறைவாகி விட்ட மணியை போலீஸார் தேடி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications