குஜராத்துக்குக் கடத்தப்படவிருந்த 9 தமிழ் சிறுவர்கள் ஆந்திராவில் மீட்பு
சென்னை:
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 9 சிறுவர்கள் குஜராத் மாநிலத்துக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த போது ஆந்திரமாநில ரயில்வே போலீஸ் படையினரால் மீட்கப்பட்டு சென்னைக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த சிறுவர்கள் அனைவரும் மதுரை மாவட்டம் சடச்சிப்பட்டியைச் சேர்ந்தவர்கள். குஜராத் மாநிலம் கட்ச் மற்றும்பரூச் ஆகிய பகுதிகளில் முறுக்கு மற்றும் அப்பளம் தயாரிக்கும் நிறுவனங்களில் கொத்தடிமைகளாக வேலைக்குஅமர்த்துவதற்காக இவர்கள் கடத்தப்பட்டார்கள்.
மொத்தம் 30 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். இருப்பினும் சென்னை வருவதற்குள் மற்ற சிறுவர்களை யாரோ சிலர்மீட்டுச் சென்று விட்டதாகத் தெரிகிறது. 9 பேர் மட்டுமே சென்னைக்கு பத்திரமாக வந்து சேர்ந்துள்ளனர்.
நேற்று காலை இந்த நாடகம் தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 40க்கும் மேற்பட்டசிறுவர்களை சுமார் பத்து பேர் நிறுத்தி வைத்துள்ளதாகவும், அவர்களைப் பார்த்தால் சந்தேகமாக இருப்பதாகவும்"சைல்ட்லைன்" என்ற சிறுவர்கள் உதவிப் பிரிவுக்கு போன் வந்தது.
இதையடுத்து "சைல்ட்லைன்" பிரிவு ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா தனது குழுவினருடன் சென்ட்ரல் ரயில்நிலையத்திற்கு விரைந்தார். குழந்தைகளுடன் பேச முற்பட்டபோது, அவர்களுடன் இருந்த பெரியவர்களும்பெற்றோர்களும் அவர்களைத் தடுத்து விட்டனர்.
இந்த நிலையில் காலை 9.45 மணிக்கு குஜராத் கிளம்பிய நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிறுவர்கள் ஏற்றப்பட்டனர்.பின்னர் ரயில் கிளம்பியதைத் தொடர்ந்து ரயில்வே போலீஸார் மூலம் ஆந்திர மாநில ரயில்வே போலீஸாருக்குத்தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கூடூர் ரயில் நிலையத்தில் உள்ளூர் போலீஸாரும், ரயில்வே போலீஸாரும் தயார் நிலையில் இருந்தனர்.
ரயில் கூடூர் வந்தபோது, 30 சிறுவர்கள் மட்டுமே ரயிலில் இருந்தனர். அவர்களை மீட்ட ரயில்வே போலீஸார்சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்களை அழைத்து வந்த 10 பேர் மற்றும் சிறுவர்களின் பெற்றோரும்ரயில்வே போலீஸாரின் பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் ரயில் சென்னைக்கு வந்தபோது 9 சிறுவர்கள் மட்டுமே ரயிலில் இருந்தனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள்என்பது பற்றித் தெரியவில்லை. அவர்களை அவர்களது பெற்றோர் பாதி வழியிலேயே மீட்டுச் சென்று விட்டதாகக்கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட 9 சிறுவர்களும் சென்னை சிறார் பாதுகாப்பு இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இந்தசிறுவர்கள் பல முறை குஜராத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனராம்.
சிறிது காலம் வேலை பார்த்து பணம் சம்பாதித்த பின்னர் அவர்களை மீண்டும் ஊருக்குக் கொண்டு வந்துவிட்டுவிடுவார்களாம். பிறகு சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் குஜராத்துக்கு அழைத்துச் சென்று விடுவார்களாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications