மதுரை, மேலூர் அரசு கல்லூரிகளுக்கு செப்.22 வரை விடுமுறை நீட்டிப்பு
சென்னை:
மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் மேலூர் அரசுக் கல்லூரி ஆகியவற்றுக்கு வரும் 22ம் தேதி வரைவிடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அரசுக் கல்லூரிகள் நாளை (திங்கள்கிழமை) திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி மற்றும் மேலூர் அரசுக் கல்லூரி ஆகியவற்றுக்கு மட்டும்விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வரும் 22ம் தேதி வரை இந்த கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சேது ராமச்சந்திரன்கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர்தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுடன் அரசுக் கல்லூரிகளை இணைப்பதைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுக்கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மதுரை மீனாட்சி கல்லூரி மற்றும் மேலூர் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது போலீஸார் கடும்அடக்குமுறையைக் கையாண்டதாகப் புகார் கூறப்பட்டது.
மேலூர் கல்லூரி மாணவர்கள் மீது போலீஸார் கடுமையான தடியடியும் நடத்தினர். மீனாட்சி கல்லூரிமாணவிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்து கொண்டனர்.
இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இரு கல்லூரி மாணவ-மாணவிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர். நாளை (16ம் தேதி) கல்லூரிகள் திறக்கப்பட்டவுடன் தங்களது போராட்டம் தொடரும் என்றும்அவர்கள் அறிவித்துள்ளனர்.
இதைக் கருத்தில் கொண்டு கல்லூரிகள் வரும் 22ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications