கருணாநிதியை விமர்சிப்பதா? - தி.க. எச்சரிக்கை
சென்னை:
தமிழில் மந்திரம் ஓதப்படும் சர்ச்சை குறித்து திமுக தலைவர் கருணாநிதியை விமர்சித்தால் அதை நாங்கள்வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக வீரமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மேடை மேடையாக தந்தை பெரியார் கேட்ட கேள்விகளைத் தான் கருணாநிதியும் கேட்டுள்ளார்.
ஆனால் கருணாநிதியைத் தானே சிலர் தாக்கிப் பேசுகிறார்கள் என்று திராவிடர் கழகமோ தமிழர்களோஅமைதியாக இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
கடவுள் இல்லை என்று கூறுபவர்களுக்கு ஏன் இந்தக் கவலை என்று கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற கேள்விகளுக்கு பல முறை நாங்கள் மேடைகளில் பதிலளித்துள்ளோம்.
நாத்திகமா அல்லது ஆத்திகமா என்பதல்ல இப்போதைய பிரச்சனை. கடவுள் இல்லை என்று கூறுவதுநாத்திகர்களின் கொள்கைப் பிரச்சனை.
ஆனால் தன் மொழிக்கும் தன் இனத்துக்கும் அவமானம் ஏற்படக் கூடாது என்பது மனித உரிமைப் பிரச்சனை.
இந்த சிறு பொறியை ஊதினால் தமிழகத்தில் அது பெருந்தீயாக மாறும். ஜாதி மற்றும் கட்சிக் கண்ணோட்டம் இன்றிமனித உரிமை, மொழி உரிமை மற்றும் இன உணர்வுள்ள அனைவரும் ஓரணியில் திரள்வார்கள் என்பது மட்டும்நிச்சயம் என்று வீரமணி அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications