சென்னையில் அதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை
சென்னை:
கேபிள் டிவி நடத்துவதில் ஏற்பட்ட தகராறில் அதிமுக பிரமுகர் ஒருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார்.
சென்னை தி. நகர் அருகே உள்ளது கண்ணம்மா பேட்டை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன். சைதைதொகுதி அதிமுக ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக இருந்த இவர் கேபிள் டிவியும் நடத்தி வந்தார்.
கேபிள் டிவி நடத்துவது தொடர்பாக பச்சையப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அமுதா என்ற பெண்ணுக்கும்இடையே தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் அடிக்கடி வாக்குவாதம் செய்து கொள்வதுவழக்கமாம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பருடன் பச்சையப்பன் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.
பின்னர் பச்சையப்பனை சரமாரியாக வெட்டித் தள்ளிய அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பியது. ரத்த வெள்ளத்தில்மிதந்த பச்சையப்பன் உயிருக்குப் போராடினார். அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
தி. நகர் பகுதி துணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் உடனடியாக போலீஸ் படையுடன் விரைந்து வந்துவிசாரணை மேற்கொண்டார். இந்தக் கொலை தொடர்பாக கோபி, மாறன் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடிவருகிறார்கள்.
அமுதாவிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவரும் அதிமுகவைச் சேர்ந்தவர் தான் என்பதுகுறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு முறை பச்சையப்பனைக் கொல்ல முயற்சி நடந்து அதில் அவர் உயிர் தப்பியதும்குறிப்பிடத்தக்கது.
-->
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications