வருமான வரி இயக்குநர் வீட்டில் "ரெய்ட்" எதிரொலி: ரஜினியின் ஆடிட்டரும் சிக்கினார்
சென்னை:
வருமான வரித்துறை இயக்குனருக்கு பணம் பெற்றுக் கொடுத்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஆடிட்டர்மாட்டிக் கொண்டார்.
தமிழக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு இயக்குனரான திரிபாதியின் வீடுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள்சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
"இக்கி ரிசார்ட்ஸ்" என்ற நிறுவனத்துக்கு ஆதரவாக திரிபாதி செயல்பட்டதன் விளைவாக வருமான வரித்துறைக்குரூ.63 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது இந்தச் சோதனைகளின் போது தெரிய வந்தது.
திரிபாதியின் இந்த ஊழல் தொடர்பாக அவருக்குப் பணம் வாங்கிக் கொடுத்த அவருடைய ஆடிட்டர் ஆஷாவிஜயராகவனின் வீடுகள் மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
சோதனை தொடரத் தொடர பல கம்பெனிகளுக்கு ஆதரவாக திரிபாதி செயல்பட்டு, பல கோடி ரூபாய் வரைபெற்றிருப்பதைக் கண்ட சி.பி.ஐ. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து திரிபாதி மீது சி.பி.ஐ. போலீசார் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே திரிபாதிக்கு பணம் பெற்றுக் கொடுத்த மற்றொரு ஆடிட்டரான சீதாராமனின் வீடு மற்றும்அலுவலகத்திலும் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சோதனையின் போது திரிபாதிக்கு அவர்பலரிடமிருந்து பணம் பெற்றுக் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.
ரஜினிக்கும் சீதாராமன் தான் ஆடிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமாற்ற முயன்ற "சி.பி.ஐ." வக்கீல் கைது:
இதற்கிடையே சிபிஐ வக்கீல் என்று கூறி திரிபாதியை மோசடிசெய்ய முயன்றதாக சென்னையச் சேர்ந்த வக்கீல்ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திரிபாதிக்கு வக்கீல் வெங்கடேஸ்வரன் என்பவர் போன் செய்து, ""நான் சி.பி.ஐயின் மூத்த சட்ட ஆலோசகர்பேசறேன். இது ஒரு வழக்கே இல்லை. இந்த வழக்கிலிருந்து உங்களை விடுவிக்கிறேன். உடனே கன்னிமாராஹோட்டலுக்கு வாங்க"" என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் திரிபாதி. இதையடுத்து வெங்கடேஸ்வரன் குறிப்பிட்டஹோட்டலுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் பறந்தனர்.
அங்கு வெங்கடேஸ்வரன் வந்தபோது அவரை வளைத்துப் பிடித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications