கோவிலை பூட்டி அர்ச்சகர்கள் ரகளை: மக்கள் கொதிப்பு
திருக்கூடலூர்:
கரூர் அருகே உள்ள திருக்கூடலூர் கோவிலில் தமிழில் மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு செய்ததால் தீட்டுஏற்பட்டு விட்டதாக கூறி கோவில் அர்ச்சகர்கள் கோவிலைப் பூட்டி ரகளை செய்தனர். இதனால் மக்கள் பெரும்கொதிப்படைந்துள்ளனர்.
கரூர் அருகே உள்ளது திருக்கூடலூர். இங்குள்ள சிவன் கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. வழக்கம்போல அல்லாமல் இங்கு தமிழில் மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதற்கு காஞ்சி சங்கராச்சாரியார் மற்றும் அர்ச்சகர்கள் பேரவை ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால்எதிர்ப்புகளையும் மீறி வெற்றிகரமாக குடமுழுக்கு விழா தமிழிலேயே நடந்தது.
இதையடுத்து தமிழில் மந்திரங்கள் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டதை திமுக தலைவர் கருணாநிதிபாராட்டியும், அவரை காஞ்சி சங்கராச்சாரியாரான ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் கடுமையாக விமர்சித்தும் அறிக்கைப்போர் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்னொரு பரபரப்பான சம்பவமும் திருக்கூடலூரில் நடந்துள்ளது.
தமிழில் மந்திரம் ஓதப்பட்டு குடமுழுக்கு விழா நடந்ததால் கோவிலில் தீட்டு ஏற்பட்டு விட்டதாக கூறி கோவில்அர்ச்சகர்கள் கோவிலை இழுத்து மூடி பூட்டி விட்டனர்.
இதனால் அந்தக் கிராம மக்கள் கொதிப்படைந்து கொந்தளித்து எழுந்தனர். அனைவரும் இந்து அறநிலையத்துறைஅதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் சென்று முறையிட்டனர்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த அதிகாரிகள் உடனடியாக அர்ச்சகர்கள் மற்றும் கிராமப் பிரதிநிதிகளைஅழைத்துப் பேச்சு நடத்தினர்.
அதன்படி கோவில் சம்ப்ரோக்ஷன தினத்தன்று காலையில் தமிழில் மந்திரம் ஓதவும், மாலையில் அர்ச்சகர்களின்விரும்பியவாறு ஆகம விதிமுறைகளின்படி மந்திரம் ஓதவும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பூட்டப்பட்ட கோவிலின் கதவுகள் திறக்கப்பட்டன.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications