ஆண்டிப்பட்டியில் கல்லூரியை துவக்கினார் ஜெ

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஆண்டிப்பட்டியில் கலைக் கல்லூரியை முதல்வர் ஜெயலலிதா இன்று துவக்கி வைத்தார். அதே போல தேனியில்மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல்லையும் ஜெயலலிதா நாட்டினார்.

ஆண்டிப்பட்டியில் அமையவுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரியின் தொடக்க விழா, புதிய மருத்துவக் கல்லூரிக்கானஅடிக்கல் நாட்டு விழா மற்றும் பல்வேறு நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க தேனி மாவட்டம் வடுகபட்டி அருகே உள்ள மேல்மங்கலம்கிராமத்தில் இன்று நடைபெற்றது.

இதற்காக காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா மதுரை சென்றடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர்மூலம் மேல்மங்கலம் சென்றடைந்தார். அவரை தேனி மாவட்ட ஆட்சியர் அதுல் ஆனந்த், சபாநயகர் காளிமுத்து, அமைச்சர்கள்வரவேற்றனர்.

ஆண்டிப்பட்டியில் போட்டியிட்டு வென்ற பின் இரண்டாவது முறையாக அவர் அங்கு சென்றுள்ளார். அவரைவரவேற்கவும் கல்லூரி துவக்க விழா நிகழ்ச்சியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

ஜெயலலிதா மதுரைக்குள் நுழையவே இல்லை. விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக ஹெலிகாப்டரில்தேனி சென்றார்.

ஆனால், தேவையில்லாமல் மதுரைக்குள் மிக பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. விமானநிலையத்தில் ஆரம்பித்து மதுரை சர்க்யூட் ஹவுஸ் வரை ஆயிரக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+