நாகப்பாவை மீட்க காட்டுக்குள் போகிறார் கொளத்தூர் மணியின் தம்பி?
பெங்களூர்:
கடத்தப்பட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை மீட்பதற்காக பெரியார் திராவிடர் கழகத்தின்தலைவரான கொளத்தூர் மணியின் தம்பியை வீரப்பனிடம் தூதராக அனுப்ப கர்நாடக அரசு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொளத்தூர் மணியுடன் கர்நாடக அதிரடிப்படைஅதிகாரி நேற்று மாலை பேச்சு நடத்தியுள்ளார்.
இதுகுறித்து அந்த அதிகாரி மூலம் தன் தம்பி பழனிச்சாமிக்கு ஒரு கடிதத்தை கொளத்தூர் மணி அனுப்பியுள்ளார்.பழனிச்சாமி தூதராகச் செல்ல வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மணி தெரிவித்துள்ளார்.
மேலும் வீரப்பனிடம் கொடுத்து விடுமாறு கூறி ஒரு கேசட்டையும் பழனிச்சாமிக்கு மணி அனுப்பியுள்ளார்.கர்நாடகத்தில் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் உடனடியாக நாகப்பாவைவிடுதலை செய்ய வேண்டும் என்று அந்தக் கேசட்டில் வீரப்பனுக்கு மணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து பழனிச்சாமியைத் தூதராக அனுப்புவது என்று கர்நாடக அரசும் முடிவெடுத்து விட்டதாகத்தெரிகிறது.
இது தொடர்பாக பழனிச்சாமியிடம் கர்நாடக அரசு பேச்சு நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சிறையில் உள்ள கொளத்தூர் மணியை பழனிச்சாமி சந்தித்து இதுகுறித்து பேசியதாக அவருடையகுடும்பத்தினர் இன்று தெரிவித்தனர்.
முன்னதாக கொளத்தூர் மணி மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் சிறைகளில்இருப்பதால் அவர்களைத் தூதராக அனுப்புவது சரியாக இருக்காது என்று கர்நாடக உள்துறை அமைச்சரானமல்லிகார்ஜுன கார்கே நேற்றே கூறிவிட்டார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications