காஷ்மீர்: தீவிரவாதிகளை மீறி 40 சதவீத வாக்கு பதிவு
ஸ்ரீநகர்:
குண்டு வெடிப்பு கள், தீவிரவாதிகளின் தாக்குதல்கள், மிக பலத்த பாதுகாப்புக்கு இடையே காஷ்மீரில் இன்று முதல் கட்டத் தேர்தல் நடந்துமுடிந்தது. இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி 40 சதவீதம் மக்கள் வாக்களித்து இந்திய ஜனநாயம் மீதான தங்கள் நம்பிக்கையைமீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இங்குள்ள 87 சட்டசபைத் தொகுதிகளுக்கு 4 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இன்று 23 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்தது. இதில் 160 பேர்போட்டியில் உள்ளனர்.
தேர்தலை சீர்குலைக்க பாகிஸ்தான் மிகக் கடுமையாக முயன்று வருவதால் மிக பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. பல்வேறுகட்சிகளின் வேட்பாளர்களை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ள நிலையில் மிகுந்த பதற்றத்துடன் இத் தேர்தல் நடந்தது.
பரூக் அதுல்லாவின் தேசிய மாநாடு, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை தான் முக்கிய போட்டியாளர்களாவர். இதில் இக் கட்சிகளின்தொண்டர்கள் முகமூடி அணிந்து தான் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு தீவிரவாதிகளின்அட்டகாசம் உள்ளது.
இவ்வளவு இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் இன்று காலை வாக்குப் பதிவு தொடங்கியவுடன் பல இடங்களில் பெரும் எண்ணிக்கையிலானமக்கள் வாக்களிக்க வந்திருந்தனர். ஆனால், பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இடங்களில் அவ்வளவாக மக்கள் கூட்டம் வாக்களிக்கவரவில்லை. இதற்கு தீவிரவாதிகளின் மிரட்டல் தான் காரணம்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முதல் ஓட்டு போடும் நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என தீவிரவாத இயக்கங்கள் மிரட்டியுள்ளன.
இத் தேர்தலை சர்வதேச பார்வையாளர்களைக் கொண்டு நடத்த இந்தியா மறுத்துவிட்டது. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்ததூதர்களை தேர்தல் நடக்கும் இடங்களுக்குச் செல்லவும் கண்காணிக்கவும் அரசு அனுமதி தந்தது. அவர்கள் பல்வேறு வாக்குச்சாவடிகளையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்கியதில் வாக்குப் பதிவு மையத்தில் பாதுகாப்புக்கு இருந்த பஞ்சாப்பைச் சேர்ந்த எலலைப்பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாமாய்த்-உல்-முஜாகிதீன் தீவிரவாதஅமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன் ரஜெளரி மாவட்டத்தில் ஒரு வாக்குப் பதிவு மையத்தின் மீதுதீவிரவாதிகள் ராக்கெட்டை வீசித் தாக்கினர். இதில் அந்தக் கட்டடம் சேதமடைந்தது. ஆனால், இதில் யாரும் காயமடையவில்லை.
தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளர் வீட்டின் மீது கிரனைட் குண்டு வீசித் தாக்குதல் நடந்தது.
உதம்பூர் மாவட்டத்தில் கிராமத் தலைவரை தீவிரவாதிகள் குண்டு வீசிக் கொன்றனர். எல்லையை ஒட்டிய கிராமங்களில் தீவிரவாதிகள்கிராம மக்களை சுற்றி வளைத்து ஒரு இடத்தில் உட்கார வைத்து ஓட்டு போட விடாமல் தடுத்துவிட்டனர்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்த ரஜெளரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாதுகாப்புக்காக 20,000 படையினர் கூடுதலாகக்குவிக்கப்பட்டிருந்தனர். வாக்குச் சாவடிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மூலமும் ராணுவம் பாதுகாப்புத் தந்தது.
நேற்றிரவு முதல் எல்லைப் பகுதியிலும் சியாச்சின் பனி மலைப் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து குண்டு மழை பொழிந்துவருகிறது. இதை எதிர்த்து இந்தியப் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் வாக்குச் சாவடிகளைச் சுற்றிலும்ராக்கெட்டுகளும் குண்டுகளும் வந்து விழுந்த வண்ணம் இருந்தன. இதையும் தாண்டி தேர்தல் நடந்தது.
இன்று காலை பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கித் தாக்குதல் துணையோடு இந்தியாவுக்குள் ஊடுருவிய 14 தீவிரவாதிகளை இந்தியராணுவம் சுட்டுக் கொன்றது. குப்வாரா மாவட்டத்தில் இச் சம்பவம் நடந்தது. அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிகுண்டுகள்,துப்பாக்கிகள், லட்சக்கணக்கான பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்க்டோகாஷ்மீர் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
சில இடங்களில் வீடுகளில் புகுந்து மக்களை வாக்களிக்க வருமாறு ராணுவம் கட்டாயப்படுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. ஆனால்,இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
ஜம்மூ, காஷ்மீரில் இருந்து வெளியேறி அகதிகளாக வாழ்ந்து வரும் இந்து பண்டிட்கள் வாக்களிக்க வசதியாக டெல்லியிலும் ஹிமாச்சல்பிரதேசத்திலும் வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்தலை உலகமே கூர்ந்து கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று தேர்தல் நடந்த இடங்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியவைய. இவ்வளவு சிக்கல்களையும் தாண்டி 40 சதவீதவாக்குகள் பதிவாகி இருப்பதற்கு ராணுவம் தந்த பாதுகாப்பும், இந்தியா மீதான காஷ்மீர் மக்களின் நம்பிக்கையும், பாகிஸ்தானை மக்கள்புறக்கணித்துவிட்டதையும் உறுதிப்படுத்துகிறது.
-->












Click it and Unblock the Notifications