அரசு கல்லூரிகள் இன்று திறப்பு: மாணவர்கள் வரவில்லை
சென்னை:
தமிழகம் முழுவதும் அரசுக் கல்லூரிகள் மீண்டும் இன்று முதல் திறக்கப்பட்டன. ஆனால், பெரும்பாலானமாணவர்கள் வகுப்புகளுக்கு வரவில்லை.
வகுப்புகளைப் புறக்கணித்து அவர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
பல்கலைக்கழகங்களுடன் கல்லூரிகளை இணைக்கும் முடிவை அரசு மாற்றிக் கொள்ளாதது, மேலூர் அரசுக் கல்லூரிமாணவர்கள் மீது போலீஸார் நடத்திய அநியாய தடியடி, மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரி மாணவிகளைகாட்டுமிராண்டிகளாக போலீசார் தாக்கியது ஆகிய விவகாரங்களுக்கு அரசிடம் இருந்து பதில் கிடைக்கும் வரைபோராட்டத்தைத் தொடரப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
அதிமுகவைச் சேர்ந்த சோப்ளாங்கி மாணவர் சங்கத்தினரை அழைத்துப் பேசிவிட்டு பிரச்சனை தீர்ந்துவிட்டதாகஅறிவித்த முதல்வர் ஜெயலலிதா கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவித்தார்.
ஆனால், போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய மாணவர் சம்மேளனம்உள்ளிட்ட முன்னணி மாணவர் சங்கங்கள் அனைத்தும் ஸ்டிரைக்கைத் தொடரப போவதாக அறிவித்துள்ளன.
மாணவர்கள் மத்தியில் அதிமுகவுக்கு ஆதரவு எப்போதும் குறைவு தான். இந்த அதிமுக ஆதரவு மாணவர்சங்கத்தினர் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. அவர்கள் வகுப்புகளுக்குப் போனாலும் கூடஒரு பயனும் இருக்காது என்கிறார்கள் பிற மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே, அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம்எதிரே இன்று போராட்டமும் நடைபெற்றது.
அதே நேரத்தில் மதுரை மற்றும் மேலூர் கல்லூரிகளுக்கு செப்டம்பர் 22 வரை விடுமுறையை அரசு நீட்டித்துள்ளது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications