தீவிரவாதத்தை நாங்களே ஒடுக்குவோம்: வாஜ்பாய்
நியூயார்க்:
பாகிஸ்தானால் தூண்டிவிடப்பட்டு வரும் தீவிரவாதத்தை ஒழிக்க யாரையும் நம்பியிருக்காமல் அதை நாங்களே ஒடுக்குவோம் என பிரதமர்வாஜ்பாய் கூறினார்.
தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நியூயார்க்கில் இருந்து டெல்லி புறப்படும் முன் நிருபர்களிடம் அவர் பேசினார்.
அவர் கூறியதாவது:
தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட இந்தியாவுக்கு உதவுவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதியளித்தார். ஆனால், நாங்கள் இந்தவிஷயத்தில் பிறரை சார்ந்து இருக்க மாட்டோம். எங்களுக்கு எதிரான தீவிரவாதத்தை நாங்களை ஒடுக்குவோம்.
இந்திய- அமெரிக்க உறவு என்பது பாகிஸ்தான் விவகாரத்தைச் சார்ந்தது அல்ல. நாங்கள் வர்த்தம், அறிவியல் ஆராய்ச்சி,பாதுகாப்புத்துறை, அணு ஆராய்ச்சி ஆகிய துறைகளில் மிக நெருங்கி செயல்படப் போகிறோம். பாதுகாப்பு உடன்பாட்டுக்கு அதிகமுக்கியத்துவம் தர நானும் அதிபர் புஷ்சும் முடிவு செய்துள்ளோம்.
நான் வேண்டுமானால் இல்லாமல் போகலாம். ஆனால், நீங்கள் (புஷ்) இருப்பீர்கள். இதனால், இந்திய- அமெரிக்க உறவுக்கு இடைஞ்சலாகஉள்ள எல்லா தடைகளையும் நாம் உடனே நீக்குவோம் என்று அவரிடம் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். இந்த அமெரிக்கப்பயணம் மிக திருப்திகரமாக அமைந்தது.
அமெரிக்காவில் உள்ள யூத அமைப்புகள் இந்தியாவுக்கு முழு ஆதரவைத் தெரிவித்தன.
12ம் தேதி புஷ்ஷை சந்தித்தபோது தீவிரவாதிகள் ஏதும் தாக்குதல் நடத்திவிடுவார்களோ என்ற கவலையில் இருந்தார். தீவிரவாதம்எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தனது அசிங்க முகத்தைக் காட்டிவிடலாம்.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை சர்வதேச எல்லையாக மாற்ற ஒப்புக் கொள்ள மாட்டோம்.
அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்தவுடன் தீவிரவாதிகள் எங்கு ஓடி மறைந்தார்கள்? அவர்கள் ஒரு நாட்டில் (பாகிஸ்தானில்) கூடஆரம்பித்துவிட்டார்கள். அவர்களை அந்த நாடு ஆதரிக்கிறது என்றார் வாஜ்பாய்.
இதன் பின்னர் சுவிட்சர்லாந்து வழியாக டெல்லிக்குப் புறப்பட்டார் வாஜ்பாய். இன்று மாலை சூரிச்சை அடைந்த அவரைசுவிட்சர்லாந்துக்கான இந்தியத் தூதர் கோயல் வரவேற்றார். பின்னர் வாஜ்பாய் அங்குள்ள நட்சத்திர விடுதியில் தங்கினார். நாளை காலைபுறப்பட்டு இரவு டெல்லி வந்தடைவார் வாஜ்பாய்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications