முசிறி விஷச் சாராய சாவுகள்: தற்கொலை என்கிறது போலீஸ்
முசிறி:
முசிறி அருகே விஷச் சாராயம் குடித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் இருவரும்தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சின்னகொடுந்துறை கிராமத்தைச் சேர்ந்த மூக்கன் (45) மற்றும் முத்துவேல் (38)ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சின்னவீரமணிப்பட்டியில் வாரச்சந்தையில் விற்கப்பட்ட சாராயத்தைக்குடித்தனர்.
இவர்களைத் தவிர மேலும் 10 பேர் வரை அங்கு சாராயம் குடித்தனர்.
இதையடுத்து வீட்டுக்குத் திரும்பிய மூக்கன் தன் மனைவியிடம் தனக்கு சாப்பாடு வைக்கும்படி கூறிக் கொண்டிருந்தபோதே திடீரென்று வாந்தி எடுத்து சுருண்டு விழுந்து அந்த இடத்திலேயே இறந்தார்.
அதே போல் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது முத்துவேலும் சுருண்டு விழுந்து பிணமானார்.
இருவருமே கூலித் தொழிலாளிகள் தான். அன்றாடம் கிடைக்கும் கூலிப் பணத்தை வைத்துக் கொண்டு தான்அவர்களுடைய குடும்பத்தினர் பிழைத்து வந்தனர். இந்நிலையில் மூக்கன் மற்றும் முத்துவேலின் பிணங்களைஅடக்கம் செய்வதற்குக் கூட பணம் இல்லாததால், ஊர் மக்களிடமே பணம் வசூலிக்கப்பட்டு அடக்கம்செய்யப்பட்டது.
உணவில் விஷம் கலந்ததால் தான் இவர்கள் இருவரும் இறந்துள்ளதாக போஸ்ட்மார்ட்டம் அறிக்கை கூறுகிறது.
மூக்கனும் முத்துவேலும் இறந்த சம்பவத்தை தற்கொலை வழக்காக போலீசார் பதிவு செய்துள்ளனர்.
சாராயம் சாப்பிட்டுத் தான் அவர்கள் இறந்தார்கள் என்றால், அதே போல் அன்று சாராயம் சாப்பிட்ட வேறு யாரும்பாதிக்கப்படவில்லையே என்று போலீசார் காரணம் கூறுகின்றனர்.
ஆனாலும் சாராயம் குடித்த ராமசாமி, சின்னசாமி மற்றும் பார்த்திபன் ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் முசிறிஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தலைமறைவாகி விட்ட சாராய வியாபாரிகளான கார்த்திக் மற்றும் கண்ணன் ஆகியோரைப்போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications