வெடித்தது குண்டா?
ஆத்தூர்:
ஆத்தூரில் நடந்த வெடிவிபத்துக்கு பட்டாசுகள் காரணமில்லை, வெடிகுண்டுகள் தான் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்த பயங்கர வெடிவிபத்தில் 21 பேர் வரை உயிரிழந்தனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் இங்கு வெடிகுண்டுகள் தான் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
அப் பகுதி மக்கள் சிலர் கூறுகையில்,
அடிக்கடி இந்த வீட்டில் ஒரு கார் வந்து நிற்கும் அதிலிருந்து பார்சல்களை இறக்கிக் கொண்டு செல்வார்கள். இந்த வீட்டிற்கு இரவு, பகல் பாராமல் அடிக்கடி யாராவது வந்து கொண்டேயிருப்பார்கள்.
வழக்கம் போலவே, நேற்று இரவும் சிவப்பு நிற மாருதி வேன் வந்து நின்றது. அந்த வண்டி வந்த பின்பு தான் விபத்து ஏற்பட்டுள்ளது. சாதாரண பட்டாசுகள் வெடித்திருந்தால் இந்த அளவுக்கு ஒரு தெருவே இடிந்து தரைமட்டமாகி இருக்காது.
மேலும், மாருதி வேனும் சுக்கு நூறாக சிதறி அடையாளமே தெரியாத அளவுக்கு இரும்புத் துகள்களாக மாறி இருப்பதைப் பார்க்கும்போது வேனில் கொண்டு வரப்பட்டது வெடிகுண்டாக இருக்கலாம் என்று தெரிகிறது அவர்கள் கூறினர்.
இதுகுறித்து போலீஸாரும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகே இதுகுறித்து தெளிவாக தெரியவரும்.
வருவாய் அதிகாரி விசாரணைக்கு ஜெ. உத்தரவு
ஆத்தூர் வெடிவிபத்து குறித்து மாவட்ட வருவாய் அதிகாரியின் விசாரணைக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50,000 வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.15,000 வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டார். முதல்வரின் பொது நிவாரண உதவியிலிருந்து இவ்வுதவிகள் அளிக்கப்படவுள்ளன.
தன் சார்பாக தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சரான செம்மலை ஆத்தூர் சென்று மீட்பு நிவாரணப் பணிகளைமேற்பார்வையிடுவார் என்றும் கூறிய ஜெயலலிதா, இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சைஅளிக்குமாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் இவ்விபத்து தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் இன்று மாலைக்குள் ஒரு அறிக்கை அளிக்க வேண்டும்என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications