மைசூர் அருகே தமிழக அரசு ஜீப்புக்கு தீ வைப்பு: கன்னட வெறியர்கள் வன்முறை
மைசூர்:
மைசூர் அருகே தமிழக வனத்துறைக்குச் சொந்தமான ஜீப்புக்கு கன்னட வெறியர்கள் தீ வைத்தனர்.
தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடக அரசியல் கட்சிகள் உதவியுடன் சிறை நிரப்பும் போராட்டத்தில் அம்மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் விவசாயப் பிரிவினர் இன்று முதல் இந்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை மைசூரில் கூடிய நூற்றுக்கணக்கான விவசாயிகள் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு நோக்கி ஊர்வலமாகப்புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இது தவிர சாம்ராஜ்நகர், மண்டியா ஆகிய மாவட்டங்களிலும் இந்த சிறை நிரப்பும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாட்டு வண்டிகளை நடு ரோட்டில் மறித்து நிறுத்தியும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் மைசூர்- பெங்களூர்நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் கொடும்பாவியையும் அவர்கள் எரித்துவருகின்றனர்.
மைசூர் அருகே ஸ்ரீரங்கப்பட்டணத்தில் தமிழக அரசின் வனத்துறைக்குச் சொந்தமான ஜீப்பை ஒரு கும்பல் வழி மறித்தது. பின்னர்அந்த ஜீப்பில் இருந்த டீசல் டாங்கை உடைத்து டீசலை எடுத்து ஜீப் மீது தெளித்து அதற்குத் தீ வைத்தனர்.
ஜீப்பில் இருந்த தமிழக அரசு டிரைவரும் அதில் வந்தவர்களும் இறங்கி ஓடியதால் பலியாகாமல் உயிர் தப்பினர்.
இதற்கிடையே கர்நாடக விவசாயிகளின் பயிர்கள் கருகி விடாமல் பாதுகாக்கப்படும் என்று கர்நாடக அமைச்சரவைஉறுதியளித்துள்ளது. இன்று காலை அவசரமாகக் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
11,000 ஹார்ஸ் பவர் எந்திரத்தின் மூலம் அணைகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு பாசனத்திற்கு விடப்படும் என்றும் அமைச்சரவைக்கூட்டத்தில் கூறிய கர்நாடக அரசு, எனவே விவசாயிகள் தங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
கிருஷ்ணா கொடும்பாவி எரிப்பு:
இதற்கிடையே சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முன் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் கொடும்பாவி இன்று எரிக்கப்பட்டது.
அதிமுகவின் புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது.
போலீஸார் ஓடி வந்து அவர்களைத் தடுத்து கொடும்பாவியை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications