கிருஷ்ணாவுடன் சுகுமாறன், கல்யாணி சந்திப்பு?
பெங்களூர்:
வீரப்பனிடம் தூது செல்வது தொடர்பாக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவை மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தபேராசிரியர் கல்யாணியும் சுகுமாறனும் இன்று நேரில் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
ராஜ்குமாரை மீட்க பெரிதும் உதவிய இந்த இருவரும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழர்களாவர். இப்போது வீரப்பனிடம் தூதுசெல்ல கொளத்தூர் மணியின் தம்பி பழனிச்சாமி மறுத்துவிட்டதையடுத்து இந்த இருவரையும் தான் கர்நாடக அரசு நம்பியுள்ளது.
இவர்களை கர்நாடக காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.
இந் நிலையில் இந்த இருவரும் நேற்று பெல்லாரி சிறைக்குச் சென்று கொளத்தூர் மணியை சந்தித்துப் பேசினர். சிறைக்கு வெளியேநிருபர்களிடம் பேசிய சுகுமாறன், எங்களை தூதுவர்களாக அனுப்ப கர்நாடக அரசு உண்மையிலேயே தீவிரமாக இருந்தால் அதுகுறித்து பரிசீலிப்போம்.
இதுவரை அப்படிப்பட்ட கோரிக்கை ஏதும் எங்களுக்கு வரவில்லை. அப்படியே கோரிக்கை வந்தாலும் பழ.நெடுமாறன் மற்றும்கொளத்தூர் மணி ஆகியோருடன் பேசிய பின்னர் தான் இறுதி முடிவு எடுப்போம் என்றார்.
இந் நிலையில் இந்த இருவரையும் முதல்வர் கிருஷ்ணா இன்று காலை நேரில் அழைத்து ரகசியமாகப் பேசியுள்ளதாகத் தெரிகிறது.முன்பு தூதுவர்களாக சென்றவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் உங்களுக்கு ஏற்படாமல் பாதுகாப்பேன் என்று அவர்உறுதியளித்ததாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்புக்குப் பின் அவசரமாக அமைச்சரவையையும் கிருஷ்ணா கூட்டி விவாதித்தார். இதில் தூதர் குறித்து சில முக்கியமுடிவுகள் எடுக்கப்பட்டதாக் தெரிகிறது.
இக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதால் ஏற்பட்டு வரும் வன்முறைகள் குறித்தும் பேசப்பட்டதாகக்கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications