கண்ணி வெடிகளை அகற்ற புலிகள்-இலங்கை கூட்டாக கோரிக்கை
சத்தாஹிப் (தாய்லாந்து):
போரின் போது இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்ற உலகநாடுகள் உதவ வேண்டும் என்று விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் கோரிக்கை விடுக்கவுள்ளன.
தாய்லாந்தில் இன்று நடந்த இரண்டாவது நாள் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினரும் இது குறித்தும் பேச்சுநடத்தினர்.
இது தொடர்பாக உலக நாடுகளிடம் இரு தரப்பினரும் கூட்டாக கோரிக்கை விடுக்கவுள்ளன. இந்தியா, அமெரிக்காமற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிகிறது. முதற்கட்டபேச்சுவார்த்தையின் இறுதி நாளான நாளை முறைப்படி கோரிக்கை விடுக்கப்படும் என்று தெரிகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 10 லட்சம் முதல் 15 லட்சம் கன்னிவெடிகள் வரை புதைக்கப்பட்டுள்ளதாகத்தெரிகிறது. அப்பாவிப் பொதுமக்கள் பலர் அடிக்கடி இந்தக் கன்னி வெடிகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
இதில் ஏற்கனவே ஏராளமான கன்னிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணி இன்னும் தொடர்ந்து நடந்துவருகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலாகத் தொடங்கிய உடனேயே, கன்னிவெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட அமெரிக்கா இரு குழுக்களை அனுப்பியது. அவர்கள் தற்போதுயாழ்ப்பாணத்தைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் கன்னி வெடிகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2வது நாளாக புலிகள்- இலங்கை பேச்சுவார்த்தை:
இதற்கிடையே விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நேரடிப் பேச்சுவார்த்தை நேற்று தாய்லாந்தில் தொடங்கியது. முதற்கட்டமாக நடக்கும்இந்தப் பேச்சுவார்த்தை மிகவும் ரகசியமாக நடைபெற்று வருகிறது.
இன்று மட்டும் மொத்தம் 6 மணி நேரம் பேச்சு நடந்தது. கன்னி வெடிகளை அகற்ற உலக நாடுகளிடம் கோரிக்கைவிடுப்பது தவிர, போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ராணுவத்தினரை இலங்கை அரசு வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கை அரசுக்கு புலிகள் விடுத்துள்ளனர்.
ஆனால் இன்றைய பேச்சுவார்த்தையின் போது தனித் தமிழ் ஈழம் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்றுகூறப்படுகிறது.
முன்னதாக, நேற்று மாலை சுமார் 3 மணியளவில் முதற்கட்டப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 5 மணி நேரம்நேற்று புலிகளும் இலங்கை அரசும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக உள்ளோம் என்றும் இந்தப் பேச்சுவார்த்தைநிச்சயம் வெற்றி பெறும் என்றும் புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் கூறினார்.
நேற்றைய பேச்சுவார்த்தையின் போது போரின் போது இலங்கையின் மற்ற பகுதிகளுக்கு அகதிகளாகப் புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களின் நிலை குறித்தும், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையின் பொருளாதாரத்தைமேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டன.
தமிழர் பகுதிகளின் பொருளாதார மேம்பாட்டின் மூலம் இலங்கையின் பொருளாதாரமே உயர்வடையும் என்றுஅரசுப் பிரதிநிதிகள் தெரிவித்ததை பாலசிங்கம் வரவேற்றார். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைத் தங்கள்கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள புலிகளின் மீதுள்ள நம்பிக்கையையே இது எடுத்துக் காட்டுவதாகவும் அவர்தெரிவித்தார்.
இந் நிலையில் இன்று இரண்டாவது நாளாகப் பேச்சுவார்த்தை தொடர்கிறது. வடக்கு மற்றும் கிழக்குஇலங்கையிலிருந்து வெளியேறிய தமிழர்கள் மீண்டும் அங்கே குடியமர்த்தப்படுவது குறித்து இன்றும் முக்கியமானபேச்சுக்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.
முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் இறுதி நாளான நாளை தான் பேச்சுவார்த்தையின் முழு விவரங்களும்எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்தும் அறிவிக்கப்படும். இதற்காக ஒரு நிருபர் கூட்டத்துக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழர் பகுதிகளின் சீரமைப்பு நடவடிக்கைக்காக முதல்கட்டமாக 40 மில்லியன் டாலர்கள் வழங்கஉலக வங்கி முன் வந்துள்ளது.
அமைதிப் பேச்சுக்கு இங்கிலாந்து வரவேற்பு:
இந்நிலையில் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் தற்போது தாய்லாந்தில் நடந்து வரும் அமைதிப்பேச்சுவார்த்தை ஒரு திருப்பு முனையாக அமையும் என்று இங்கிலாந்து கூறியுள்ளது.
டெல்லியில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் ஓபிரியன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,
இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை முழுமையாகத் தீருவதற்கு இன்னும் அதிக நாட்கள் ஆகும் என்றாலும்தற்போதைய பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள இந்த அமைதிப் பேச்சுவார்த்தையை இங்கிலாந்து முழுமையாகஆதரிக்கிறது என்றார்.
பேச்சுவார்த்தைக்கு முழு முயற்சிகளையும் எடுத்த நார்வே நாட்டினரையும் மைக் பாராட்டியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications