வீரப்பனிடம் தூது செல்ல கொளத்தூர் மணி தம்பி மறுப்பு
ஈரோடு:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பனிடமிருந்து மீட்பதற்காகத் தூது செல்லப் போக மாட்டேன்என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவரான கொளத்தூர் மணியின் தம்பி பழனிச்சாமி மறுத்துவிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது என் அண்ணன் தான் தூதராகச் சென்றார்.
ஆனால் மனிதாபிமான அடிப்படையில் சென்ற அவரை அனைவரும் மிகவும் கொச்சைப்படுத்தி விட்டனர்.அவருக்கு ஏற்பட்ட கதி எங்கள் குடும்பத்தினர் யாருக்கும் வரக் கூடாது என்றே நான் விரும்புகிறேன்.
ஏற்கனவே தூது சென்றவர்களின் நிலையும் தற்போது மிகவும் பரிதாபமாகவே உள்ளது. மேலும் வீரப்பனிடம்தூது செல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி கிடையாது.
எனவே நான் தூது செல்லத் தயாராக இல்லை. தூது செல்வதை நான் மட்டுமில்லாமல் என் குடும்பத்தினரும்ஊர்க்காரர்களும் கூட விரும்பவில்லை என்றார் பழனிச்சாமி.
பழனிச்சாமியின் இந்த முடிவால் கர்நாடக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. வேறு யாரைத் தூதராக அனுப்பலாம்என்று தீவிரமாக யோசித்து வருகிறது.
தூது எப்போ? கல்யாணி விளக்கம்:
இதற்கிடையே வீரப்பனிடம் தூது செல்வது குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறனுடன்ஆலோசித்த பிறகே முடிவு செய்யவுள்ளதாக பேராசிரியர் கல்யாணி கூறியுள்ளார்.
தூது அனுப்ப பாண்டிச்சேரியைச் சேர்ந்த பேராசிரியர் கல்யாணி மற்றும் சுகுமாறன் ஆகியோரை தற்போதுகர்நாடக அரசு அணுகியுள்ளது. இருப்பினும் இருவரும் இதுகுறித்து இறுதி முடிவை கர்நாடகத்திடம் இன்னும்தெரிவிக்கவில்லை.
கடலூர் சிறையில் உள்ள நெடுமாறன் மற்றும் பெல்லாரி சிறையில் உள்ள கொளத்தூர் மணி ஆகியோரை நேரில்சந்தித்து பேசிய பிறகு தான் காட்டுக்குச் செல்வது குறித்து முடிவு செய்யவுள்ளதாக கல்யாணி கூறியுள்ளார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications