வாசனுக்கு கூடுதல் பொறுப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரான ஆஸ்கார் பெர்னாண்டஸுக்கு உதவியாக முன்னாள் தமாகாவின்தலைவரான ஜி.கே. வாசன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. காங்கிரசுடன்தமாகா இணைந்த பின்னர் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

காங்கிரசுடன் தமாகா இணைந்த கடந்த ஆகஸ்டு 14ம் தேதியே வாசனுக்கு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்பதவி கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ஆஸ்கார் பெர்னாண்டஸ், தனக்கு உதவியாகவும் வாசன் செயல்படுவார்என்று கூறினார்.

அதன்படி கட்சியின் உள் விவகாரம், தேர்தல் விவகாரம் மற்றும் கட்சி நிர்வாகப் பொறுப்பு ஆகியவற்றில்ஆஸ்காருக்கு உதவியாக வாசன் செயல்படவுள்ளார்.

மேலும் பிகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி விவகாரங்களையும் வாசன் கவனித்துக்கொள்வார் என்றும் ஆஸ்கார் இன்று கூறினார்.

இதற்கிடையே இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, தமிழக காங்கிரசின் முக்கியத்தலைவர்கள் அனைவரையும் அகில இந்திய செயலாளர்களான ரமேஷ் சென்னிதாலா, நரேஷ் ராவல் மற்றும்ஆஸ்கார் ஆகியோர் தனித்தனியாகச் சந்தித்தனர்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுவது குறித்து அப்போது அவர்கள் விவாதித்தனர். இதன் பின்னர்நிருபர்களிடம் சென்னிதாலா பேசுகையில்,

காங்கிரசுடன் தமாகா இணைந்த பிறகு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை மாற்ற வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. தமிழக காங்கிரசின் தலைவர் முதல் அனைத்து மட்டத்திலும் உள்ள நிர்வாகிகள் மாற்றப்பட உள்ளனர்.

புதிய நிர்வாகிகள் குறித்து வரும் 23ம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக காங்கிரசின் புதிய நிர்வாகிகளை சோனியா அறிவிப்பார் என்றார்சென்னிதாலா.

இக்கூட்டத்தில் வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், முன்னாள் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி,சட்டசபை காங்கிரஸ் தலைவர் யசோதா உள்ளிட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

பதவியைப் பெற கூட்டத்தில் கோஷ்டிப் பூசல் அதிக அளவில் இருக்கும் என்பதால் கோஷ்டிப் பூசலை கிளப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே ரமேஷ் சென்னிதாலா எச்சரித்திருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+