ஆத்தூர்: வெடித்தவை ஒரு டன் சக்தியுள்ள வெடிகள்
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூரில் வெடிவிபத்து நடந்த பகுதியில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி மூட்டை,மூட்டையாக பட்டாசுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு இங்கு 35 மூட்டைகளில் இருந்த சுமார் 500 கிலோ எடை கொண்ட வெங்காய வெடிகள்வெடித்தன என்ற விவரம் இப்போது தெரியவந்துள்ளது. இவை ஒரு டன் ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுக்குஇணையானவை என வெடிகுண்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆத்தூர் பாரதியார் தெருவில் நடந்த இந்த பயங்கர வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். 25 வீடுகள்இடிந்து தரைமட்டமாயின.
இங்கு வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதால் சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள்ஆத்தூர் விரைந்துள்ளனர். இவர்கள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து பொருள்களை எடுத்து ரசாயனசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாநில வெடிபொருள் துறை துணைக் கட்டுப்பாட்டு அதிகாரியான முடிமன்னனும் கூடுதல் டி.ஜி.பி. நடராஜும்சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டனர். நிருபர்களிடம் முடிமன்னன் கூறுகையில், இது வெங்காய வெடிகளால்ஏற்பட்ட வெடிப்பு தான். ஆர்.டி.எக்ஸ் குண்டு வெடித்ததற்கான ஆதாரம் ஏதும் சிக்கவில்லை.
35 சாக்கு மூட்டைகளில் இருந்த வெங்காய வெடிகள் ஒரு டன் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துக்கு இணையானவை.இதனால் தான் பயங்கர சேதம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தமிழகம் முழுவதுமே சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருப்போர் மீது போலீஸார் நடவடிக்கைஎடுத்து வருகின்றனர்.
விபத்து நடந்த ஆத்தூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் பல வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகள்சிக்கின. இவற்றை நீரில் மூழ்க வைத்து அழித்து வருகின்றனர் போலீசார்.
தீபாவளி நெருங்குவதால் பல இடங்ளிலும் வியாபாரிகளும் சீட்டு பிடிக்கும் நபர்களும் கோடிக்கணக்கானமதிப்புள்ள பட்டாசுகளை உரிய அனுமதியோ பாதுகாப்போ இல்லாமல் பதுக்கி வைத்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications