பாண்டிச்சேரியில் வரும் 23 முதல் மீண்டும் காலை உணவுத் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாண்டிச்சேரியில் ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ, மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ராஜீவ் காந்தி காலை உணவுத் திட்டம் வரும் 23ம் தேதிமுதல் மீண்டும் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரியில் சமீபத்தில் காலை உணவாக ரொட்டி, பால் சாப்பிட்ட ஆயிரக்கணக்கான பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த காலை உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் வரும் 23ம் தேதி முதல் இந்தத் திட்டம் மீண்டும் தொடங்கப் படுவதாக மாநில கல்வி அமைச்சர்லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஏற்கனவே பால், ரொட்டிகளை வழங்கி வந்த நிறுவனங்களை மாற்றும் திட்டம் அரசிடம் இல்லை.அவையே தொடர்ந்து பால், ரொட்டிகளை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+