கபினி அணையில் குதித்து விவசாயி சாவு: நீர் திறப்பு நிறுத்திவைப்பு
பெங்களூர்:
கபினி அணையில் நேற்று ஒரு கர்நாடக விவசாயி குதித்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்துதமிழகத்திற்கு அவ்வணையிலிருந்து நீர் திறந்துவிடப்படுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்துவிடப்படுவதை எதிர்த்து மாண்டியா மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து பெரும்போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் கபினி அணையில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும்அவர்கள் மிரட்டியிருந்தனர்.
இந்நிலையில் சுமார் 600 விவசாயிகள் நேற்று கபிலா ஆற்றுப் பாலப் பகுதியில் சென்று போராட்டம் நடத்தினர்.தமிழகத்திற்கு நீர் திறந்து விடக் கூடாது என்று கோஷம் எழுப்பியவாறே அவர்கள் கபினி அணை வளாகத்தைநோக்கி முன்னேறினர்.
ஆனால் அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் "தள்ளுமுள்ளு" ஏற்பட்டது.
இந்நிலையில் ஒரு பெண் விவசாயி திடீரென்று கூட்டத்திலிருந்து வெளியேறி அணையில் குதிக்க முயன்றார்.ஆனால் போலீசார் உடனடியாகச் செயல்பட்டு அந்தப் பெண்ணைத் தடுத்தனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள்மீது தடியடியும் நடத்தினர் போலீசார்.
அப்போது திடீரென்று ஐந்து விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளையெல்லாம் உடைத்துக் கொண்டு கபினிஅணையின் பக்கம் சென்றனர். எங்கள் உயிரைக் கொடுத்தாவது தமிழகத்திற்கு தண்ணீர் செல்வதைத் தடுப்போம்என்று கோஷம் போட்ட அவர்கள் திடீரென்று அணையில் குதித்தனர்.
மெயின் மதகு வழியாக தண்ணீர் சீறிப் பாய்ந்து வந்து கொண்டிருந்த பகுதியில் அவர்கள் விழுந்ததால் வெள்ளத்தில்சிக்கிக் கொண்டு அந்த ஐந்து விவசாயிகளும் உயிருக்குப் போராடினர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரும் சில விவசாயிகளும் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தசிலரும் கால்வாயில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த விவசாயிகளை மீட்டனர். ஆனால் அவர்களால் நான்குவிவசாயிகளை மட்டுமே மீட்க முடிந்தது.
குருசாமி (50) என்ற மற்றொரு விவசாயியை பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர்களால் மீட்க முடியவில்லை.அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து கபினி அணைப் பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதையடுத்து கபினிஅணையின் மதகுப் பகுதி உடனடியாக மூடப்பட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் செல்வதும் தடுக்கப்பட்டது.
தற்போது சுமார் 2,000 கர்நாடக விவசாயிகள் கபினி அணையை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு மட்டுமல்லாமல்மைசூர், மாண்டியா மற்றும் பெங்களூரிலும் இதுவரை இல்லாத அளவுக்குப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையடுத்து போலீசாரும் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்தவர் போதையில் இருந்தாரா?
இதற்கிடையே கபினி அணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட குருசாமி அப்போது போதையில்இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவருடன் குதித்த வேறு இருவரும் நன்றாகக் குடித்திருந்ததாகவும், போதை தலைக்கேறிய நிலையில் தான்அவர்கள் திடீரென்று அணையில் குதித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இறந்து போன குருசாமிக்கு மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனர். தன் மகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான்அவர் திருமணம் செய்து வைத்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications