கும்மிடிப்பூண்டியில் கள்ளச் சாராய ஆலை கண்டுபிடிப்பு: 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி:
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் கள்ளச் சாராய தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டு ரூ.1 கோடிமதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் சாராயம் தயாரிக்க உதவும் அதி நிவீன கருவிகள் ஆகியவை பறிமுதல்செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியிலிருந்து கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் கர்நாடகமாநிலம் பெங்களூருக்குக் கடத்தப்படுவதாக மதுவிலக்குப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுமார் 40 போலீஸார் அடங்கிய குழுவினர் கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணா புரம் பகுதியில் திடீர்சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது. வேறு பெயரில் இயங்கி வந்த அந்தத் தொழிற்சாலைக்குள்கள்ளச் சாராயம் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தத் தொழிற்சாலையில் பல அதி நவீனக் கருவிகளும் இருந்தன. அங்கிருந்த இரண்டு பேரைக் கைது செய்தபோலீஸார், ரூ.1 கோடி மதிப்புள்ள கள்ளச் சாராயம் மற்றும் கருவிகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
-
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications