கருணாநிதி கலந்து கொள்வாரா?
சென்னை:
நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டுதமிழகத்திற்கு பயனளிக்கும் விதத்தில் ஆக்கப்பூர்வமான யோசனைகளை அளிக்க வேண்டும் என்று விவசாயிகள்உள்பட அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவதில்லை, தான் தோன்றித்தனமாகசெயல்படுகிறார், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார், எதிர்க்கட்சிகளின் யோசனைகளை புறக்கணிக்கிறார் என்றுஜெயலலிதா மீது காவிரிப் பிரச்சினை தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள், காவிரிப் பிரச்சினை தொடர்பாக தங்களது கருத்தை எடுத்துரைக்கஜெயலலிதா ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளார். ஆனால் இதை எத்தனை தலைவர்கள் சரியான முறையில்பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
அதிமுக அரசு நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் பெரும்பாலும் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்வதில்லை. மிக அதாகவே கலந்து கொள்கிறார். அவருக்குப் பதில் அக்கட்சியின் பொதுச் செயலாளரானஅன்பழகன் அல்லது முனனாள் அமைச்சர்களான துரைமுருகன், ஆற்காடு வீராசாமி அல்லது இரண்டாம் மட்டத்தலைவர்கள் யாராவது தான் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால் இந்த முறை அது நடக்கக் கூடாது என்று அனைத்துத் தரப்பினருமே எதிர்பார்க்கிறார்கள்.
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினை குறித்த கூட்டம் என்பதால், மூத்த அரசியல்தலைவரான கருணாநிதியே இதில் கலந்து கொண்டு தனது யோசனைகளை எடுத்து வைக்க வேண்டும்.
தேவைப்பட்டால், அதிமுக அரசுக்கு அறிவுரையும் கூற வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. கருணாநிதிகருத்துக்களை கூறும் போது அதை ஜெயலலிதா எதிர்க்க முடியாது, எதிர்க்கவும் கூடாது.
எனவே கருணாநிதியே நேரடியாக கலந்து கொண்டு தமிழக விவசாயிகளின் நலனுக்காக நடத்தப்படும்இக்கூட்டத்தில் தன்னுடைய கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதுபோலவே மற்ற எதிர்க்கட்சிகளும் தங்களது தலைவர்களையே அனுப்பி வைத்து இக்கூட்டத்தில்ஆக்கப்பூர்வமான யோசனைகளை வழங்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மறுபடியும் இம்மாதியான கூட்டம் கூட்டப்படுமோ இல்லையோ என்று தெரியவில்லை என்பதால், கட்சிபாகுபாடுகளை மறந்து மாநில நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இந்தக் கூட்டத்தை சரியான முறையில்பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளின் பிரச்சினையைத் தீர்க்க என்ன செய்யலாம் என்று அரசுக்கு எதிர்க்கட்சிகள் அறிவுறுத்த வேண்டும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடக்கும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுஎன்பதை மறுக்க முடியாது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications