அரசுடன் நடத்திய பேச்சு திருப்தி தருகிறது: புலிகள் அறிவிப்பு
பாங்காக்:
இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக அமைந்திருந்ததாக விடுதலைப் புலிகள் இயக்கம்தெரிவித்துள்ளது.
தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாக புலிகள் அறிவித்திருப்பதால் மிக விரைவிலேயே இனப் பிரச்சனைக்கு தீர்வுஏற்பட்டுவிடும் என இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நேற்று நடந்த பேச்சுவார்த்தைகளின்போது தமிழர் பகுதிகளில் சுயாட்சி, தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம், தமிழர்களுக்குகிடைக்க வேண்டிய நியாயமான அதிகார்கள் கிடைத்தால் போதும் தனி நாடு தேவையில்லை என புலிகள் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டது.
அதே நேரம் தமிழர்களை ஒடுக்கும் முயற்சிகள் நடந்தால் மீண்டும் ஆயுத போராட்டத்தில் ஈடுபடவும் தயங்க மாட்டோம் எனபுலிகள் கூறியிருந்தனர்.
இதற்கு இலங்கைப் பிரதமர் வரவேற்பு தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் செயாலாளர் கோபி அன்னானை சந்தித்துப்பேசிய அவர் பின்னர் ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தனி நாடு கோரிக்கையை புலிகள்கைவிட்டிருப்பதால் அமைதி முயற்சிக்கு பெரும் பலம் கிடைத்திருக்கிறது.
இனப் பிரச்சனை காரணமாக இலங்கை நாடே திவாலாகும் நிலை ஏற்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக கடந்தஆண்டு தான் நாட்டின் வளர்ச்சி எதிர்மறையான நிலையை அடைந்தது (நெகடிவ் குரோத்). இதற்கு இன மோதல் தான் காரணம்என்றார் ரணில்.
இதற்கிடையே நேற்று பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்ட புலிகளின் அரசியல் தலைவர் ஆண்டன் பாலசிங்கம் இன்றுதாய்லாந்து நாட்டு அதிகாரிகளைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
தாய்லாந்து வெளியுறவுத்துறைச் செயலாளர் டெஜ் பின்னாங்கைச் சந்தித்த அவர், பேச்சுவார்த்தைகள நடத்த இடம் தந்து,வசதிகளையும் செய்து தந்த தாய்லாந்து நாட்டுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பாலசிங்கம், இந்தப் பேச்சுவார்த்தைகள் மிக நல்ல முறையில் நடந்தன. நல்ல பாதையில் செல்லஆரம்பித்துள்ளன. மிகுந்த திருப்தி தந்தன. இதனால் தாய்லாந்தும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது என்றார்.
இதற்கிடையே தாய்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறையிடம் விளக்க நார்வே அமைதித்தூதர் விடார் ஹெல்கிசன் இன்று டெல்லி வந்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications