சவூதியில் போலீஸ் கொடுமைக்கு தமிழக வாலிபர் சாவு
நாகர்கோவில்:
கன்னியாகுமரியைச் சேர்ந்த செல்வராஜ் என்ற வாலிபர், சவூதி அரேபியாவில் போலீஸாரால்கொடுமைப்படுத்தப்பட்டு இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பஞ்சி காட்டுவிளை என்ற பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் எட்டுவருடங்களுக்கு முன்பு சவூதி சென்றார். கொத்தனார் வேலைக்குச் சென்றசெல்வராஜ், அதிக அளவில் சம்பாதிக்கமுடியவில்லையே என்று வருந்தினார்.
இதையடுத்து குறுக்குப் புத்தியுடன் அவருக்கு ஒரு ஐடியா தோன்றியது. தனது பெயரை நாசர் அலி என்று மாற்றிக்கொண்டு போலியான அடையாளத்துடன் வேறு நல்ல வேலையில் சேர்ந்தார்.
ஆனால் சில நாட்களிலேயே அவரது வேஷம் வெளுத்து விட்டது. இதையடுத்து சவூதி போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.
செல்வராஜை போலீஸார் மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து செல்வராஜின் நண்பர்களிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் செல்வராஜின்குடும்பத்தினருக்கு இதைத் தெரிவித்தனர். பதறிப்போன குடும்பத்தினர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் இத்தகவலைத் தெரிவித்தனர்.
அவர் சவூதியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு செல்வராஜின் உடலை இந்தியாவுக்குஅனுப்ப ஏற்பாடு செய்யமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
நாளை (வெள்ளிக்கிழமை) செல்வராஜின் உடல் அவரது சொந்த ஊருக்கு வந்து சேரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
போலியான பெயருடன் பல வேலைகளுக்கு செல்வராஜ் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனாலேயேபோலீஸாரிடம் அவர் மாட்டிக் கொண்டதாக தெரிகிறது.
-->
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications