இலங்கை தமிழர்களுக்கு புலிகள் நம்பிக்கை துரோகம்: சுவாமி குற்றச்சாட்டு
சென்னை:
தாய்லாந்து பேச்சுவார்த்தையின் போது தனி ஈழம் கேட்கவில்லை என்று அறிவித்திருப்பதன் மூலம் இலங்கைத்தமிழர்களுக்கு விடுதலைப்புலிகள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர் என்று ஜனதா கட்சித் தலைவர்சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
இந்தியா போன்று இலங்கையிலும் ஒரு குடியரசு ஆட்சி அமைந்தால் மட்டுமே அந்நாட்டுத் தமிழர்களின்பிரச்சனை தீரும்.
இதற்காகத் தான் தனி ஈழம் வேண்டும் என்று தமிழர்கள் போராடி வந்தனர். இந்தப் போராட்டத்தை நிறுத்தி விட்டுதற்போது இலங்கை அரசுடன் புலிகள் பேச்சு நடத்தச் சென்றதே தவறு.
இந்நிலையில் நேற்றைய முதற்கட்டப் பேச்சுவார்த்தையின் நிறைவில் தனி ஈழம் கேட்டு நாங்கள் போராடவில்லைஎன்று புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் கூறியுள்ளார்.
இதை இலங்கைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இப்படிப் பேசியதன் மூலம் அவர்களுக்குப் புலிகள்நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டனர்.
புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கை அமைச்சர்கள் யாரும் சந்தித்துப் பேசக் கூடாது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அவரைஇந்தியாவிடமே ஒப்படைக்க வேண்டும்.
காவிரி விஷயத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசும் கர்நாடக அரசும் நம்பிக்கை துரோகம் செய்து விட்டன.இதற்குப் பொறுப்பேற்று தமிழகத்தில் உள்ள பத்து மத்திய அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்.
வீரப்பன் விஷயத்திலும் கர்நாடக அரசு தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. வீரப்பனைத் தேடி தமிழகஅதிரடிப்படையினர் தொடர்ந்து தீவிர வேட்டை நடத்தி வரும் நிலையில் கர்நாடக அதிரடிப்படையினர் தேடுதல்வேட்டையை நிறுத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
வெளிநாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராக வரக் கூடாது என்றுஜெயலலிதா கூறியது சரி தான். இந்தியாவில் பிறந்த ஒருவர் தான் இந்தியாவின் பிரதமராகவும் ஆக வேண்டும்என்றார் சுவாமி.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications