குடும்பங்களை பட்டினி போட்டு கோவில்களில் அன்னதானமா?: கி.வீரமணி கேள்வி
சென்னை:
கோவில்களில் அன்னதானத்தைத் தொடங்கியுள்ள தமிழக அரசு 10,000 சாலைப் பணியாளர்களைவேலையைவிட்டு நீக்கி அந்தக் குடும்பங்களை பட்டினியில் தள்ளியுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிகூறியுள்ளார்.
திமுக ஆட்சியில் பணியில் நியமிக்கப்பட்ட 10,000 சாலைப் பணியாளர்களை சமீபத்தில் தமிழக அரசு பணி நீக்கம்செய்தது. இதனால் இந்தக் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. தொடர்ந்து போராட்டங்களிலும்ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திடீரென 10,000 பேரை வேலைவிட்டுத் தூக்கியுள்ளது தமிழக அரசு. அவர்களின் குடும்பம் குறித்து யோசித்துப்பார்த்ததா என்று தெரியவில்லை. அக் குடும்பங்களின் நிலையை எண்ணிப் பார்த்தால் மனம் வேதனை அடைகிறது.
கோவில் கோவிலாக அன்ன தானத் திட்டத்தைத் தொடங்கி வரும் தமிழக அரசு இந்தக் குடும்பங்களை பட்டினியில்தள்ளியுளது என்ன விதத்தில் நியாயம்? என்று கேட்டுள்ளார் வீரமணி.
திருமாவளவனும் எதிர்ப்பு:
10,000 சாலைப் பணியாளர்களை திடீரென வேலையை விட்டுத் தூக்கியதற்கு விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவனும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த அக் கட்சியின் கூட்டத்தில் இந்த வேலை நீக்கத்தைக் கண்டித்தும், திண்ணியத்தில் தலித்களை உயர்ஜாதியினர் மலம் தின்ன வைத்து கொடுமைப்படுத்தியதைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் பாப்பாரப்பட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்த விடாமல் தடுக்கும் உயர் ஜாதியைச்சேர்ந்தவர்களை தமிழக அரசுக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் அந்த ஜாதியினருக்கு ஆதரவாக அரசுசெயல்படுவதாகவும் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
-->


Click it and Unblock the Notifications
