கர்நாடகம் விரையும் காவிரி கண்காணிப்புக் குழு
டெல்லி:
தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் மறுத்து விட்டதைத் தொடர்ந்துஅம்மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக காவிரி கண்காணிப்புக் குழுவினர்இன்று அங்கு செல்கின்றனர்.
டெல்லியில் நேற்று அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, தமிழகத்திற்குஇப்போதைக்கு நீர் திறந்து விட முடியாது என்று கூறிவிட்டார். மேலும் நேற்று இரவு பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துஇதற்கான காரணங்களை விளக்கி மனு ஒன்றையும் கிருஷ்ணா அளித்தார்.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும் என்று காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவருமான வாஜ்பாய் காவிரி கண்காணிப்புக் குழுவுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து காவிரி கண்காணிப்புக் குழுவினர் இன்று கர்நாடகம் விரைந்து அங்குள்ள அணைகளின் நீர் இருப்புகுறித்து நாளை ஆய்வு நடத்துகின்றனர்.
இந்தக் குழுவினர் தமிழகத்திற்கும் சென்று மேட்டூர் மற்றும் கல்லணை ஆகிய அணைகளின் நீர் இருப்பு குறித்துஆய்வு நடத்துவார்கள் என்று தெரிகிறது.
பின்னர் இந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் அடுத்தகட்ட நடவடிக்கையைமேற்கொள்வார்.
இதற்கிடையே காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்றஅவமதிப்பு வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிகிறது.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications